/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி
/
கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி
PUBLISHED ON : மார் 07, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பட்டுநுால்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர், 46; இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, துளசி என்ற நண்பரை சந்திக்க; கிளாய் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றார்.
பின், மது போதையில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கினார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன், கிணற்றில் இருந்து சுதாகர் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.