/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஒப்புகை சீட்டுகூட தராமல் ஒப்புக்கு நடந்த முகாம்கள் மீண்டும் நடத்த கோரிக்கை

PUBLISHED ON : மார் 07, 2025 12:00 AM
அண்ணா நகர், வீட்டு வசதி வாரிய திட்டங்களில், வீடு, மனை வாங்கியவர்கள், பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்கள், கோட்ட அலுவலகங்கள் வாயிலாக நடத்தப்படும் என, வாரியம் அறிவித்தது.
முதற்கட்டமாக, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திட்டங்களின் ஒதுக்கீட்டாளர்கள், பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்கள், அந்தந்த கோட்ட அலுவலகங்கள் வாயிலாக, கடந்த பிப்ரவரி முழுதும் நடந்தது.
இம்முகாம்கள் குறித்து முறையாக எந்த அறிவிப்பும் கிடைக்காமல் தவறவிட்டதால், மீண்டும் நடத்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, விண்ணப்பிக்க தவறிய பயனாளிகள் கூறியதாவது:
முகாம் நடக்கும் நாள், இடம் குறித்த விபரங்களை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து, ஒவ்வொரு ஒதுக்கீட்டாளரின் வீட்டிற்கும் அனுப்ப வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அண்ணா நகர், திருமங்கலத்தில் முகாம்கள் குறித்து, எந்த விளம்பரமும் கண்ணில் பார்க்கவில்லை.
அந்தந்த கட்சியினர், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே தகவல் கொடுத்து அழைத்து சென்றுள்ளனர். பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு எந்த ஒப்புகை சீட்டும் வழங்கவில்லை.
முகாமை மீண்டும் அவகாசத்துடன் நடத்தி, விண்ணப்பதாரருக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.