/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சூலேரிக்காடு குடிநீர் ஆலை பணிகள் தீவிரம் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்
/
சூலேரிக்காடு குடிநீர் ஆலை பணிகள் தீவிரம் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்
சூலேரிக்காடு குடிநீர் ஆலை பணிகள் தீவிரம் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்
சூலேரிக்காடு குடிநீர் ஆலை பணிகள் தீவிரம் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்
PUBLISHED ON : ஆக 04, 2024 12:00 AM

மாமல்லபுரம்:சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை மாநகரின் குடிநீர் வினியோகத்திற்காக, கடல்நீரில் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்குகிறது.
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சி சூலேரிக்காடில் உள்ள முதல் பிரிவில், ஒரு நாளில் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி திறன் ஆலை, 2013 முதல் இயங்குகிறது.
அதே பிரிவில், ஒரு நாளைக்கு 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி திறன் கொண்ட மற்றொரு ஆலை புதிதாக அமைக்கப்பட்டு, கடந்த பிப்., முதல் இயங்குகிறது.
அதே ஊராட்சியில் உள்ள பேரூரில், இரண்டாவது பிரிவு திட்டமாக,ஒரு நாளைக்கு 40 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி திறன் ஆலை, 4,276.44 கோடி ரூபாயில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலையை முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு ஆகஸ்டில், 'வீடியோ கான்பரன்சிஸ்' வாயிலாக அடிக்கல்நாட்டினார்.
ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் இயங்கும், ஆளவந்தார் அறக்கட்டளையின் 85 ஏக்கர் நிலம், நீண்டகால குத்தகைக்கு வாரியத்திடம் அளிக்கப்பட்டது. ஆலை கட்டுமான நிறுவனம், கடலோர சமனற்ற மணற்பரப்பை சமன் செய்து, அண்மையில் கட்டுமான பணிகளை துவக்கியது. இப்பணிகளுக்காக, கோவளம் மின்வாரிய பிரிவிலிருந்து, முதல்கட்டமாக, 40 கி.வா., மின் இணைப்பு பெறப்பட்டு உள்ளது.
ஆலை இயக்கத்திற்காக, 110 கி.வா., துணைமின் நிலையம் அமைக்கவும், மின்வாரியத்திடம் குடிநீர் வாரியம் கேட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் தீவிரமாகநடக்கிறது.
இதுகுறித்து வாரிய அலுவலர் கூறியதாவது:
கடலை ஒட்டி கடல்நீரை உள்வாங்கும் 'இன்டேக்' தொட்டி, கிழக்கு கடற்கரை சாலை அருகில், குடிநீராக உற்பத்தி செய்த நீரை சேமிக்கும் 'புராடக்ட் வாட்டர்' தொட்டி, நீரை சுத்திகரிக்கும் 'க்ளீயர் வாட்டர்' தொட்டி ஆகியவை அமைக்கும் பணிகள் நடக்கிறது. பிற பணிகளுக்கு 'எர்த் ஒர்க்' நடக்கிறது.
இவ்வாறு அவர்கூறினார்.