/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கால் டாக்சி ஓட்டுநர் வெட்டிக் கொலை
/
கால் டாக்சி ஓட்டுநர் வெட்டிக் கொலை
PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் ராஜா, 42; கால் டாக்சி ஓட்டுநர். நேற்று இரவு, தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை - எல்டாம்ஸ் சாலை சந்திப்பு வழியாக நடந்து சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த ராஜா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
தேனாம்பேட்டை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, பழைய குற்றவாளியான மணிகண்டன், கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து வெட்டியது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.