sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

கிடா வெட்டில் குடித்து கும்மாளமிட்ட போலீசார்!

/

கிடா வெட்டில் குடித்து கும்மாளமிட்ட போலீசார்!

கிடா வெட்டில் குடித்து கும்மாளமிட்ட போலீசார்!

கிடா வெட்டில் குடித்து கும்மாளமிட்ட போலீசார்!

1


PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''நடிகர் ரஜினி படத்துல பணிபுரியும் வாய்ப்பு தந்தை, மகனுக்கு கிடைச்சிருக்குது பா...'' என்ற படியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''கடந்த 1991ல் நடிகர் ரஜினியும், மம்மூட்டியும் நடிச்ச, தளபதி படம் வெளியாச்சே... இந்த படத்துல, உதவி இயக்குனரா இருந்தவர் முரளி அப்பாஸ்... அப்புறமா, அஜித் நடித்த, ராசி படத்தை இயக்குனாரு பா...

''சில படங்களுக்கு கதாசிரியராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருந்தவர், இப்ப நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில நிர்வாகியா இருக்காரு... இவரது மகன் பிரவீன்காந்தி, இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனரா இருக்காரு பா...

''ரஜினி நடிக்கிற, கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குறதால, அவருடன் பிரவீன் காந்தியும் இருக்காரு... கிட்டத்தட்ட, 33 வருஷ இடைவெளியில ரஜினி படத்துல தந்தை, மகன் பணிபுரிவதை கோடம்பாக்கம் வட்டாரத்துல ஆச்சரியமா பேசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''இந்த, 33 வருஷமும் கதாநாயகனாகவே ரஜினி நடிக்கறதும் ஒரு சாதனை தான ஓய்...'' என்ற குப்பண்ணாவே, ''வாக்கி - டாக்கியை தொலைச்சும், 'அசால்டா' இருக்கார் ஓய்...'' என்றார்.

''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''ஈரோடு மாவட்டம், மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், முக்கிய அதிகாரியா இருக்கறவருக்கு தரப்பட்ட வாக்கி டாக்கி, 10 நாளுக்கு முன்னாடி காணாம போயிடுத்து... ஜீப்புல இருந்து தான் மாயமாகிடுத்துன்னு சொல்லிஇருக்கார் ஓய்...

''போலீசார், அதை தேடிண்டு இருக்கா... அதே நேரம், 'இது சம்பந்தமா இதுவரை சி.எஸ்.ஆர்., கூட போடல... அதிகாரி மேல எந்த நடவடிக்கையும் இல்ல... இதே நாங்க தொலைச்சிருந்தா, மெமோ, சஸ்பெண்ட்னு எங்களை படுத்தி எடுத்திருப்பா'ன்னு போலீசார் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''என்கிட்டயும் ஒரு போலீஸ் ஸ்டோரி இருக்கு வே...'' என, கடைசி மேட்டருக்கு கட்டியம் கூறினார், பெரியசாமி அண்ணாச்சி.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''திருச்சி மாவட்டம், கொள்ளிடம் போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரியா இருக்கிறவர், சமீபத்துல தான் இங்க வந்தாரு... பழைய இடத்துல பெண் விவகாரத்துல சிக்கி தான், இங்க துாக்கி அடிச்சிருக்காவ வே...

''இங்க வந்தும் அடங்காம, எல்லா சட்ட விரோத நடவடிக்கைக்கும் உடந்தையாக இருந்து மாமூலை வாங்கி குவிக்காரு... சமீபத்துல, 'டிவி' நிருபர் ஒருத்தர், லால்குடி பக்கத்துல கிடா வெட்டு நடத்தி, விருந்து வச்சாரு வே...

''அந்த நிருபர் வழியா தான், மணல் கடத்தல் மாமூல் அதிகாரிக்கு வருது வே... இதனால, அந்த ஏரியாவுல இருக்கிற டாஸ்மாக் பார் நடத்துறவரிடம் பேசிய போலீஸ் அதிகாரி, கிடா வெட்டுக்கு பீர், பிராந்தி பாட்டில்களை இலவசமா சப்ளை பண்ண சொல்லிட்டாரு... அந்த விருந்துல கொள்ளிடம், சமயபுரம் ஸ்டேஷன்களை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட போலீசாரும் கலந்துக்கிட்டு, 'சரக்கு' அடிச்சு, ஆடிப்பாடி கும்மாளம் போட்டிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பெரியவர்கள் அரட்டை முடிவுக்கு வர, பெஞ்ச் காலியானது.






      Dinamalar
      Follow us