/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
குமரகோட்டம் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
/
குமரகோட்டம் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், ஆனி மாத விசாகம் திருநட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது குமரகோட்டம், சுப்பிரமணிய சுவாமி கோவில்.
இங்கு,காஞ்சிபுரம் விசாகம் முருகன் அடியார் குழு சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நேற்று நடந்தது.
இதில், மாகேஸ்வர சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. தொடர்ந்து திருவாசகம் எட்டாம் திருமுறையில், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும் அடியார் குழுவினர் முற்றோதல் செய்தனர்.