sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 கல்வி அலுவலக ஊழியரிடம் பல லட்சங்களை இழந்த 20 பேர்!

/

 கல்வி அலுவலக ஊழியரிடம் பல லட்சங்களை இழந்த 20 பேர்!

 கல்வி அலுவலக ஊழியரிடம் பல லட்சங்களை இழந்த 20 பேர்!

 கல்வி அலுவலக ஊழியரிடம் பல லட்சங்களை இழந்த 20 பேர்!

1


PUBLISHED ON : பிப் 28, 2026 03:33 AM

Google News

PUBLISHED ON : பிப் 28, 2026 03:33 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நா ட்டு சர்க்கரை டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''போலீசார் விரக்தியில இருக்காவ வே...'' என, பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''அவங்களுக்கு என்ன பிரச்னையாம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''தமிழக போலீசாருக்கு வருஷத்துக்கு, 30 நாட்கள் விடுமுறை உண்டு... இதை எடுக்காத வங்களுக்கு, வருஷ கடைசியில், 15 நாட்களுக்கான சம்பளத்தை தருவாவ வே...

''கொரோனா காலத்துல, இந்த, 'சரண்டர் லீவ்' சலுகையை நிறுத்திட்டாவ... கடந்த, 2025 அக்டோபர்ல இருந்து, இந்த சலுகை மீண்டும் வழங்கப்படும்னு அறிவிச்சாவ வே...

''ஆனா, தாம்பரம் கமிஷனரகத்தில் பணிபுரியும் போலீசாருக்கு, 'நிதி இல்லை'ன்னு சொல்லி, இந்த சரண்டர் சம்பளத்தை தர மாட்டேங்காவ... அதே மாதிரி, 10 வருஷங்கள் எந்த புகாருக்கும் ஆளாகாம பணிபுரியும் போலீசாருக்கு, அண்ணா பதக்கம் வழங்கி, அவங்க மாத சம்பளத்தில், 500 ரூபாய் உயர்த்துவாவ வே...

''அதேபோல, 10 வருஷம் பணியை முடிச்ச போலீசாருக்கு, டி.ஏ.,வா மாசம், 50 ரூபாயும், 15 வருஷம் முடிச்சவங்களுக்கு மாசம், 100 ரூபாயும் ஏத்துவாவ... இதையும் வழங்காததால, போலீசார் எல்லாம் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''ரொம்பவே உஷாரா இருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன்... மதுரையைச் சேர்ந்த இவரது முன்னாள் உதவியாளர் பாலாஜியை, சமீபத்தில் மோசடி வழக்குல போலீசார் கைது செஞ் சாங்களே... இந்த மோசடி யில் தொடர்புடைய, இன்னொரு முன்னாள் உதவியாளர் இலக்குவன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிட்டாரு பா...

''இந்த வழக்கு சம்பந்தமா, அமைச்சரிடம் இப்ப இருக்கிற உதவியாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தியிருக்காங்க... இதனால அமைச்சர், தன்னை அடிக்கடி பார்க்க வர்றவங்க மற்றும் உதவியாளர்களின் மொபைல் போன்களை வாங்கி, தன்னோட ஐ.டி., டீமிடம் குடுத்து, நல்லா செக் பண்ணிட்டு, ரெண்டு நாள் கழிச்சு தான் திருப்பி குடுக்கிறாரு பா...'' என்றார், அன்வர்பாய்.

''இந்த மோசடி கதையையும் கேளும் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''சென்னை சைதாப்பேட்டையில், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகத்துல ஒரு ஊழியர் இருக்கார்... இவர், தன்னை துணை ஆய்வாளர்னு சொல் லிண்டு, கல்வி இயக்குநர க அலுவலகத்துல வலம் வரார் ஓய்...

''அங்க இருக்கற சில ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்திருக்கார்... அதோட, 'பள்ளிக்கல்வி அமை ச்சரின் உதவியாளர் கள் எல்லாம் எனக்கு நன்னா தெரியும்'னு சொல்லி, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வாங்கி தரதா, 5 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை, 20 பேரிடம் வசூல் பண்ணியிருக்கார் ஓய்...

''ஆனா, யாருக்கும் இடமாறுதல் வாங்கி தரல... இவரிடம் ஏமாந்த சிலர், தற்கொலைக்கு முயற்சி பண்ணி பிழைச்சிருக்கா... போலீஸ் மற்றும் சிறை துறையில் பணிபுரியும் ரெண்டு பேரே, தங்களது குடும்பத்தாருக்காக இவரிடம் பணம் குடுத் து ஏமாந்திருக்கா ஓய்...

''மோசடி ஊழியர் மீது மாவட்ட கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இயக்குநர் வரை புகார்கள் போயும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கல...'' என்ற குப்பண்ணாவே, ''சடகோபன், இப்படி உட்காரும்... நாங்க கிளம்பறோம் ஓய்...'' என்றபடியே நகர, மற்றவர்களும் எழுந்தனர்.






      Dinamalar
      Follow us