/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
7 வயது சிறுமியிடம் சீண்டல் சித்த மருத்துவருக்கு '20 ஆண்டு'
/
7 வயது சிறுமியிடம் சீண்டல் சித்த மருத்துவருக்கு '20 ஆண்டு'
7 வயது சிறுமியிடம் சீண்டல் சித்த மருத்துவருக்கு '20 ஆண்டு'
7 வயது சிறுமியிடம் சீண்டல் சித்த மருத்துவருக்கு '20 ஆண்டு'
PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM
சென்னை, கொடுங்கையூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்த மருத்துவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமிக்கு, 2022ல் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக, ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டார். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெற்றோர், சிறுமியிடம் விசாரித்ததில், கொடுங்கையூரில் சித்தா கிளினிக் நடத்தி வரும் பாலசுப்பிரமணி, 60, என்ற சித்த மருத்துவர், சிறுமியை கிளினிக்கிற்கு அழைத்து சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிந்தது.
பெற்றோர் புகாரின்படி வழக்கு பதிந்த எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் பாலசுப்பிரமணியை கைது செய்தனர்.
இதன் விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சித்த மருத்துவர் பாலசுப்பிரமணி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக இரண்டு லட்சம் ரூபாய், தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும், உத்தரவில் குறிப்பிட்டார்.