/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
துணை முதல்வருக்காக ஆவடியில் 24 நிமிடங்கள் போக்குவரத்து தடை
/
துணை முதல்வருக்காக ஆவடியில் 24 நிமிடங்கள் போக்குவரத்து தடை
துணை முதல்வருக்காக ஆவடியில் 24 நிமிடங்கள் போக்குவரத்து தடை
துணை முதல்வருக்காக ஆவடியில் 24 நிமிடங்கள் போக்குவரத்து தடை
PUBLISHED ON : நவ 25, 2025 04:07 AM

ஆவடி: ஆவடி பேருந்து நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் வெண்கல சிலையை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''ஆவடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா திருவுருவ சிலையை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன். ஏற்கனவே இங்கிருந்த சிலையை சிற்பி எஸ்.பி.பிள்ளை வடிவமைத்தார். 1970ல், அதை முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது திறக்கப்பட்ட இந்த புதிய சிலையை, எஸ்.பி.பிள்ளையின் பேரன் சிற்பி தீனதயாளன் வடிவமைத்திருக்கிறார். கருணாநிதியின் பேரனான, நான் திறந்து வைத்திருக்கிறேன்,'' என்றார்.
அம்பத்துார் அருகே உதயநிதி வரும்போது, அவர் வருகைக்காக ஆவடி பேருந்து நிலையம் அருகே சி.டி.எச்., சாலையில் தடுப்பு போட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், வேலை மற்றும் பல்வேறு தேவைக்களுக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இருந்தவர்கள், 24 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆவடி கமிஷனர் சங்கர் தலைமையிலான போலீசார், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அனைவரையும் காத்திருக்க செய்தது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

