/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ராகவேந்திரா கோவிலில் 354வது ஆராதனை விழா
/
ராகவேந்திரா கோவிலில் 354வது ஆராதனை விழா
PUBLISHED ON : ஆக 12, 2025 12:00 AM

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் ராகவேந்திரா சுவாமி கோவிலில், 354வது ஆராதனை விழா, நேற்று நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், வடக்குப்பட்டு புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஹனுமத் சமேத ராகவேந்திரா சுவாமிகளின் 354வது ஆராதனை விழா, நேற்று முன்தினம் துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணியளவில் ராகவேந்திரா சுவாமிக்கு, சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜை, ஆராதனை உள்ளிட்டவை நடந்தன.
தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இன்றும், ராகவேந்திரா சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்டவை நடைபெற உள்ளன.