/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போதை மாத்திரை விற்பனை மாணவர் உட்பட 4 பேர் கைது
/
போதை மாத்திரை விற்பனை மாணவர் உட்பட 4 பேர் கைது
PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM
எம்.ஜி.ஆர்., நகர்,
எம்.ஜி.ஆர்., நகர், சூளைப்பள்ளம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்ற நான்கு பேரிடம் விசாரித்தனர்.
அவர்களது 'டியோ' ஸ்கூட்டரை சோதனை செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
பிடிபட்டோர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த தனியார் இன்டர்நெட் நிறுவன ஊழியர்கள் கவுதம், 22, அஜித்குமார், 23, தாம்பரத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் பி.காம் 2ம் ஆண்டு பயிலும் முத்துசெல்வன், 20, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 'பி' பிரிவு ரவுடிஜெயகுமார், 23, என, தெரியவந்தது.
நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 94 டைடோல் போதை மாத்திரைகள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.