/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நேபாள வாலிபரிடம் வழிப்பறி 5 பேர் கைது
/
நேபாள வாலிபரிடம் வழிப்பறி 5 பேர் கைது
PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

மதுரவாயல்: நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர் கேசவ் பகதுார், 32. இவர், அரும்பாக்கம் பி.டி., ராஜா தெருவில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
கடந்த 30ம் தேதி இரவு, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக நண்பருடன் பைக்கில் சென்றார். ஆர்.ஆர்., ேஹாட்டல் அருகே சென்றபோது, அங்கு நின்ற 5 பேர் கும்பல், பைக்கை வழிமறித்து கத்தி முனையில் கேசவ் பகதுாரிடம் மொபைல் போன் மற்றும் பணம் பறித்தனர்.
இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். இதில், மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த, சூர்ய பிரகாஷ், 27, ரூபேஷ், 22, புவனேஸ்வரன், 24, சையத் அபுதாயர், 31, ராபின் ராஜ், 25, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, கத்தி மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், ரூபேஷ் மீது 5 வழக்குகளும், புவனேஸ்வரன் மீது 2 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.