/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' பொறுப்பு ' பதவியில் புகுந்து விளையாடும் பெண் அதிகாரி!
/
' பொறுப்பு ' பதவியில் புகுந்து விளையாடும் பெண் அதிகாரி!
' பொறுப்பு ' பதவியில் புகுந்து விளையாடும் பெண் அதிகாரி!
' பொறுப்பு ' பதவியில் புகுந்து விளையாடும் பெண் அதிகாரி!
PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM

''கட்டாய வசூல் நடக்குதுங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' எனகேட்டார், அன்வர்பாய்.
''துாத்துக்குடி -- நாசரேத்டயோசீசன் கட்டுப்பாட்டுல, 275 கல்வி நிறுவனங்களுக்கு மேல செயல்படுதுங்க... இதுல,1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்இருக்காங்க...
''சங்க தொகை என்ற பெயரில், இவங்களது அடிப்படை சம்பளத்துல மாசா மாசம், 3 சதவீதம் வசூலிச்சாங்க... இப்ப, திடீர்னு வளர்ச்சி நிதி என்றபெயர்ல, 6 சதவீதம் தரணும்னு நிர்வாகம் தரப்புல கட்டாயப்படுத்துறாங்க...
''டயோசீசன் நிர்வாகத்துல சில வருஷங்களாகவே குழப்பம் நீடிக்கிறதால, ரெண்டு தரப்பினர் மாறி மாறி கோர்ட்டுக்கு போயிட்டு இருக்காங்க...வழக்கு செலவுக்காகவே,இப்படி ஆசிரியர்கள் சம்பளத்துல, 'கை' வைக்கிறாங்களாம்...
''தர மறுக்கிற ஆசிரியர்களை, 'இடமாற்றம் பண்ணிடுவோம்'னு மிரட்டுறாங்க... இதனால,'கல்வித் துறையின் ஒப்புதல் இருந்தால் தான் ஆசிரியர்களை இடமாறுதல் பண்ண முடியும்னு உத்தரவு பிறப்பிக்கணும்'னு அரசுக்கு ஆசிரியர்கள் மனு அனுப்பிட்டு இருக்காங்க...'' என்றார்,அந்தோணிசாமி.
''பணி நீட்டிப்புக்கு ஜாதி ஆயுதத்தை கையில்எடுத்திருக்காரு வே...'' என்ற, பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சென்னை மாநகராட்சியில், எல்லா பொறியாளர்களையும் தன்கட்டுப்பாட்டுல வச்சிருக்கிற தலைமை அதிகாரி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியிலும் செல்வாக்காஇருந்தாரு... அவருக்கு, 'டிரான்ஸ்பர்' தயாரானா,தன் சமுதாய தலைவர்கள்மூலமா, ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி குடுத்து, பதவியை தக்க வச்சுக்கிடுவாரு வே...
''இந்த மாச கடைசியில,அதிகாரி ஓய்வு பெற இருக்காரு... ஆனாலும்,இந்த ஆட்சி முடியும்வரைக்கும் தன் பதவியைநீட்டிக்க, திரும்பவும் ஜாதி ஆயுதத்தை கையில எடுத்திருக்காரு...'என் சமுதாய அமைச்சர்களின் தயவுல, பதவியிலநீடிப்பேன்'னு தனக்கு நெருக்கமான பொறியாளர்களிடம் சவால் விட்டுட்டு இருக்காரு வே...''என்றார், அண்ணாச்சி.
''பொறுப்பு பதவியிலயேபுகுந்து விளையாடறாங்கஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருப்பா அது...'' எனகேட்டார், அன்வர்பாய்.
''கோவை மாவட்டம்,நெகமம் சார் - பதிவாளர்ஆபீஸ்ல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... சக அதிகாரிகள், ஊழியர்களை, எல்லார் முன்னிலையிலும் சகட்டுமேனிக்கு திட்டறாங்க ஓய்...
''ஒரு பெண் ஊழியரைதிட்டி திட்டியே, பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர்ல அனுப்பிட்டாங்க... இத்தனைக்கும்அதிகாரி, பொறுப்பு பதவியில தான் இருக்காங்க ஓய்...
''பெரும்பாலும், 'பைவ் டிஜிட்'ல தான், 'கட்டிங்' வாங்கறாங்க... தினமும் டோக்கன் பதிவு செய்து, பத்திரப்பதிவு நடந்தாலும், யார்அதிகமா கட்டிங் தராளோ,அவா டாகுமென்ட்களுக்குமட்டும் முன்னுரிமை குடுத்து, பதிவு செய்றாங்க ஓய்...
''மாசத்துக்கு 25 லட்சம்ரூபாய்னு, 'டார்கெட்' நிர்ணயிச்சு வசூலை வாரிகுவிக்கறாங்க... மூணு வருஷத்துக்கும் மேலா, இவங்க சாம்ராஜ்யத்தை அசைக்கவே முடியல ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் புதியவர்கள்அமர, பெரியவர்கள் கிளம்பினர்.