/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சீட்டு குலுக்கி வசூல் நடத்தும் போலீஸ் அதிகாரி!
/
சீட்டு குலுக்கி வசூல் நடத்தும் போலீஸ் அதிகாரி!
PUBLISHED ON : அக் 20, 2024 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் விளக்குபோட்டிருக்காங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் - பனமரத்துப்பட்டி பிரதான சாலையில், ஒண்டிக்கடை பஸ் ஸ்டாப் இருக்கு... அங்க இருந்து,பனமரத்துப்பட்டி ஏரி துண்டுக்கரை வரை, ஜருகுமலை அடிவாரம் வழியா, 2 கி.மீ.,க்கு தார்ச்சாலை போகுதுங்க...
''இந்த சாலையில், முதல் ஒரு கி.மீ.,க்கு, சேலம் வி.ஐ.பி.,க்களுக்கு சொந்தமான பண்ணை வீடுகள், காட்டேஜ்கள் இருக்கு... இந்த ஒரு கி.மீ.,யில இருக்கிற, 33 மின் கம்பங்கள்ல, சமீபத்துலபனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து சார்புல, புது தெருவிளக்குகளை பொருத்தினாங்க...
''அதுக்கப்புறம் இருக்கிற ஒரு கி.மீ.,க்கு, அதாவது துண்டுக்கரை வரை மின் கம்பங்கள் இருந்தும், தெருவிளக்கு போடல... அந்த பகுதியிலஏழை, எளிய மக்கள், விவசாயிகள் தான் குடியிருக்காங்க...
''மலை பகுதியில இருந்து பாம்பு, தேள் உள்ளிட்ட பூச்சிகள்,இவங்க வீடுகளுக்குள்ளபுகுந்துடுது... வி.ஐ.பி.,க்களுக்கு விளக்கு போட்ட பஞ்சாயத்து அதிகாரிகள்,அப்பாவி மக்களை, 'அம்போ'ன்னு விட்டுட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''போன் அழைப்பை எடுக்காதவா மேல புகார்குடுத்திருக்கார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னை, சாந்தோம்லபத்திரப்பதிவு துறை மாநிலதலைவர் அலுவலகம் இருக்கோல்லியோ... இங்க இருக்கற டெலிபோனுக்கு யார் போன் பண்ணாலும் எடுக்கவேமாட்டா ஓய்...
''இத்தனைக்கும், அந்த ஆபீஸ்ல மூணு பெண் ஊழியர்கள் இருக்காங்க... சமீபத்துல,பத்திரப்பதிவு தலைவரை சந்தித்து பேச நேரம் கேக்கறதுக்காக, காங்., கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் சிவராஜசேகரன், 'கால்' பண்ணியிருக்கார் ஓய்...
''ஆனா, பல முறை போன் அடிச்சும் யாரும்எடுக்கல... இதனால், ஆபீசுக்கே நேரா போய்,தன் மொபைல் போன்லஇருந்து மறுபடியும் கால் பண்ணியிருக்கார் ஓய்...
''அங்க இருந்த பெண் ஊழியர்கள், வேடிக்கை பார்த்துண்டு இருந்தாங்களே ஒழிய, ரிசீவரை எடுக்கவே இல்ல... அவங்களிடம் போய், 'ஏன் போனை எடுக்க மாட்டேங்கறேள்'னுகேட்டதுக்கு சரியா பதில்தரல... இது பத்தி, கூடுதல்பத்திரப்பதிவு துணை தலைவரிடம் புகார் குடுத்துட்டு வந்திருக்கார்ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சீட்டு குலுக்கி போட்டு வசூல் நடத்துதாரு வே...'' என, கடைசிமேட்டருக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, ஆவடி கமிஷனரக கட்டுப்பாட்டுல,செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் ஸ்டேஷன் இருக்கு... பெரிய எல்லையை கொண்டதால,தினமும் நாலஞ்சு வழக்காவது வந்துடுது வே...
''ஸ்டேஷன் முக்கிய அதிகாரி, வழக்கு மற்றும்புகார்களை கையாள மூணுகுழுக்கள் அமைச்சு, பலமான வசூல் வேட்டைநடத்துதாரு... குறிப்பா விபத்து, உயிரிழப்பு வழக்குகளை, குறிப்பிட்ட சில வக்கீல்களிடம் மட்டும் கொடுத்து, அவங்களிடம் கணிசமான தொகையை கறந்துடுதாரு வே...
''இதுலயும், வக்கீல்களுக்குள்ள பிரச்னை வராம இருக்க, சீட்டு குலுக்கி போட்டு, வழக்குகளை பிரிச்சு குடுக்காரு... இவரை பத்தி, ஆவடி போலீஸ் கமிஷனருக்கு பக்கம் பக்கமா புகார் போயிருக்குவே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.