sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பகிரங்கமாக மாமூல் வாங்கும் போலீஸ் அதிகாரி!

/

பகிரங்கமாக மாமூல் வாங்கும் போலீஸ் அதிகாரி!

பகிரங்கமாக மாமூல் வாங்கும் போலீஸ் அதிகாரி!

பகிரங்கமாக மாமூல் வாங்கும் போலீஸ் அதிகாரி!

1


PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“வீட்டை காலி பண்ணிட்டாருப்பா...” என்றபடியே பெஞ்சுக்கு வந்தார், அன்வர்பாய்.

“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.

“முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம், துணை முதல்வர் மற்றும் அமைச்சரா இருந்தப்ப, சென்னை, கிரீன்வேஸ் சாலையில அரசு பங்களாவுல குடியிருந்தார்... பதவிகள் போனதும், அதே சாலையின் எதிர்புறம் உள்ள பெரிய வீட்டுல வாடகைக்கு குடி போனாரு பா...

“அங்க தான், அவரது அணி நிர்வாகிகளை பார்த்துட்டு இருந்தாரு... இப்ப, திடீர்னு அந்த வீட்டை காலி பண்ணிட்டாரு பா...

“இப்ப, சென்னைக்கு வந்தா ஹோட்டல்ல தான் தங்குறாரு... வாடகை கொடுக்க முடியாம, காலி பண்ணிட்டாரா அல்லது ஆதரவாளர்கள் அடிக்கடி வீடுதேடி வந்து, 'அரசியல்ல அடுத்து என்ன செய்ய போறீங்க'ன்னு கேள்வி கேட்கிறதால, காலி பண்ணிட்டாரான்னு தெரியல பா...” என்றார், அன்வர்பாய்.

“பன்னீர் தகவல் என்கிட்டயும் ஒண்ணு இருக்குதுங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

“பன்னீர்செல்வம் அணியில இருக்கிறவர், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்... சமீபத்துல இவர் தந்த பேட்டியில், '2026 சட்டசபை தேர்தல்ல, பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., பெருசா எதையும் சாதிக்காது'ன்னு சொல்லிட்டாருங்க...

“இதை பார்த்து கடுப்பான பழனிசாமி, 'நம்ம கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை எல்லாம் மறுபடியும் இழுத்து போடுங்க'ன்னு அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு சிக்னல் குடுத்துட்டாருங்க...

“உடனே, அ.தி.மு.க., நிர்வாகிகள் தீவிரமா களம் இறங்கிட்டாங்க... முதல் கட்டமா, சென்னை புறநகர் மாவட்டத்துல, பன்னீர் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வெங்கட்ராமன், 1,000 பேருடன் சமீபத்துல அ.தி.மு.க.,வுல ஐக்கியமாகிட்டாருங்க...

“எம்.ஜி.ஆர்., இளைஞரணியின் துாத்துக்குடி மாவட்ட முன்னாள் துணை செயலர் சீனிராஜ், வடசென்னை மாவட்ட முன்னாள் செயலர் சிவா ஆகியோர், தலா, 500 பேருடன் அ.தி.மு.க.,வில் இணைய தயார்னு கடிதம் குடுத்திருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.

“எஸ்.பி., வரைக்கும் புகார் போயும் பலன் இல்ல ஓய்...” என்றார், குப்பண்ணா.

“யார் மேல வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

“கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீஸ் சப் - டிவிஷன் பகுதியில, ஏராளமான கிராமங்கள் இருக்கு... இதுல பல கிராமங்கள்லயும், சில தாபா ஹோட்டல்லயும் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோரா நடக்கறது ஓய்...

“குறிப்பா, மத்துார் போலீஸ் ஸ்டேஷன் ஏரியாவுக்கு உட்பட்ட ஒட்டப்பட்டி, ஓபிளிகாட்டூர், கண்ணன்டஹள்ளி, கோட்டூர் பகுதிகள்ல ஐந்து பேர் கும்பல், 24 மணி நேரமும், 'சரக்கு' விற்பனை பண்றா... இவா மேல, மத்துார் போலீஸ் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கறது இல்ல ஓய்...

“அதுவும் இல்லாம, தாபா முன்னாடியே போலீஸ் வாகனத்தை நிறுத்தி, துணிச்சலா மாமூல் வாங்கிண்டு போறார்... சக போலீசார் யாராவது இது பத்தி கேட்டா, அவாளை ஒருமையில திட்டி தீர்க்கறார் ஓய்...

“எப்பவுமே ஒருவித டென்ஷன்ல இருக்கற அதிகாரி, புகார் அளிக்க வர்ற பொதுமக்களையும் தாறுமாறா திட்டி அனுப்பறார்... இவரை பத்தி எஸ்.பி.,க்கு ஏகப்பட்ட புகார்கள் போயும் நடவடிக்கை இல்ல ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.

பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.






      Dinamalar
      Follow us