/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அனுமந்தபுரம் சாலையோரம் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
அனுமந்தபுரம் சாலையோரம் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
அனுமந்தபுரம் சாலையோரம் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
அனுமந்தபுரம் சாலையோரம் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

மறைமலை நகர், டசிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலை 9.கி.மீ., நீளம் கொண்டது. இந்த சாலையை தென்மேல்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையில் தென்மேல்பாக்கம் - சிங்கபெருமாள் கோவில் இடைப்பட்ட பகுதியில் சாலை குறுகலாகவும் சாலை ஓரம் பெரிய அளவில் பள்ளங்களும் உள்ளன.
இதன் காரணமாக இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அடிக்கடி சிறு சிறு விபத்துக்களும் நடக்கின்றன. எனவே இந்த பள்ளங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.