sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மதச்சார்புக்கு கிடைத்த வெற்றி!

/

மதச்சார்புக்கு கிடைத்த வெற்றி!

மதச்சார்புக்கு கிடைத்த வெற்றி!

மதச்சார்புக்கு கிடைத்த வெற்றி!


PUBLISHED ON : நவ 27, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 27, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கிரிதரன், பொள்ளாச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு, தமிழகத்தில், 'மதச்சார்பின்மை' என்ற வார்த்தை படும் பாடு இருக்கிறதே...

சமீபத்தில், மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள, 288 இடங்களில் பா.ஜ., கூட்டணி, 233ல் வெற்றி வாகை சூடியது. காங்., கூட்டணி, வெறும், 50 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும், காங்., கட்சி வெறும், 16 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 81 இடங்களில், 'இண்டியா'கூட்டணி - 56, பா.ஜ., கூட்டணி - 24 தொகுதிகளில் வென்றுள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வரலாற்று வெற்றியை பெற்றுள்ள, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும், இண்டியா கூட்டணிக்கும் வாழ்த்துகள். இது மக்களாட்சிக்கும், மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி' என, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி, 234 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளதை, கண்டு கொள்ளவும் இல்லை; வாழ்த்து தெரிவிக்கவும் மனம் வரவில்லை.

காரணம், மஹாராஷ்டிரா இந்தியாவில் உள்ள மாநிலம் அல்ல போலும்!

மறைந்த, கருணாநிதியிடம் ஒரு பழக்கம் உண்டு... தேர்தலில் வெற்றி பெற்றால், 'இது, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி' என்றும், தோற்றால், 'பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது' என்றும் கூறுவது வழக்கம்.

'தந்தை எவ்வழியோ, தனயனும் அவ்வழியே!' என்பதை ஸ்டாலின் பின்பற்றுகிறாரோ...

இருக்கட்டும்... ஜார்க்கண்டில், 'இண்டியா' கூட்டணி வென்றது, மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி என்றால், மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி வெற்றி வாகை சூடியது, மதச்சார்புக்கு கிடைத்த வெற்றி என்று எடுத்துக் கொள்ளலாமா?



மு யன்றுதான் பாருங்களேன்!


எஸ்.ராம், சென்னையிலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:முன்னாள் பிரதமர் இந்திரா,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்குஜோதிட ஆலோசனைகள்வழங்கிய கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பூஞ்சார்மித்ரன் நம்பூதிரிபாட்உடல்நலக் குறைவால் காலமாகி விட்டார்.

'வருமான வரித்துறைஇன்னொரு முறை சோதனை நடத்தினால், பழனிசாமி, அ.தி.மு.க.,வைபா.ஜ.,வுடன் இணைத்து விடுவார். மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் தி.மு.க., அரசை மக்கள் கொண்டாடுவதை சகிக்க முடியாமல், பழனிசாமிக்கு கோபம் வருகிறது.

'அரசின் திட்டங்களுக்குஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாபெயர் வைத்தால்கூட,பழனிசாமி ஏற்றுக்கொள்ளமாட்டார்; காரணம் அவருடைய ஆதர்ஷதலைவர்களான மோடி, அமித் ஷா பெயரை சூட்டத்தான் அவர் விரும்புவார்' என்று, துணைமுதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.

ஜோதிடர் பூஞ்சார்மித்ரன்நம்பூதிரிபாட் காலமானதும்,அவரைப்போலவே அரசியல்வாதிகளுக்கு ஜோதிடம் கணித்துக் கூறும்பொறுப்பை துணை முதல்வர் உதயநிதி ஏற்றுக்கொண்டுள்ளார். வாழ்க அவரது ஆரூடம்!

இவரது ஆரூட கணிப்புமெய்யா அல்லது பொய்யாஎன்று கணித்துப் பார்க்க ஒருசூப்பர் ஆலோசனை...

அதாவது, திராவிட மாடல் கழக அரசு அடுத்துசெயல்படுத்தவுள்ள மக்கள்நலத்திட்டத்திற்கு,'எம்.ஜி.ஆர்., அல்லது ஜெயலலிதா' பெயரை சூட்டிஅறிவிப்பு வெளியிடட்டும்.

அப்போது முன்னாள் முதல்வர் பழனிசாமி அதைஏற்றுக்கொண்டு, அமைதியாககழக அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கிறாரா அல்லதுஅந்த திட்டத்திற்கு, மோடிஅல்லது அமித் ஷா பெயரைத்தான் சூட்ட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாரா என்று, முயன்று பார்த்து விடலாம் அல்லவா?

உதயநிதி மேலும் கூறிய ஆரூட பலன் என்னவெனில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அல்லது பழனிசாமியின் சொந்தக்காரர்கள் யார் வீட்டுக்காவது வருமான வரித்துறை சோதனை நடத்தினால், பழனிசாமி,அ.தி.மு.க.,வை பா.ஜ.,வுடன்இணைத்து விடுவார் என்பது.

அ.தி.மு.க.,வை பா.ஜ.,உடன் தான் இணைக்க வேண்டுமா... தாய் கழகமானதி.மு.க.,வுடன் இணைக்க முன்வந்தால், ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா?

செந்தில் பாலாஜி உட்பட,அ.தி.மு.க.,வில் இருந்து கட்சிதாவி, தி.மு.க.,வுக்கு வந்த அத்தனை பேருக்கும்மதிப்பு மருவாதியோடு, அமைச்சர் பதவிகளும் கொடுத்த அரசியல் கட்சியானதிராவிட மாடல் கழகமானது,தற்போது, அ.தி.மு.க.,வையே கலைத்து தி.மு.க.,வில் இணைக்க முன்வந்தால் ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா?

துணை முதல்வர் பதவியோடு, அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எதிர்கால பலனை,காலஞ்சென்ற ஜோதிடர் பூஞ்சார்மித்ரன் நம்பூதிரிபாட் போல, துல்லியமாக புட்டுப்புட்டு வைக்கும் உதயநிதியை, பாராட்டி கைதட்டி வரவேற்போம்!



சமூகத் தின் மரியாதையை காப்பாற் றுங்கள்!


ஏ.ஸ்ரீவாஸ், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்,ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அதில், தமிழ் சினிமாவில் பிராமணர்களை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தியுள்ளனர்என்பதை காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த, 'திருப்பணி'யின் முக்கிய பங்காளரே ஈ.வெ.ரா., தான் என்பது நாடறிந்த உண்மை.

அதேநேரம், தி.க.,வினர் கொடுக்கும், 'பில்டப்' போல, ஈ.வெ.ரா.,ஒரு நாஸ்தீகர், சமூகநீதிக்காரர் மட்டுமல்ல... இந்தியாவை உடைத்து, 'திராவிடஸ்தான்' எனும் பெயரில், இன்னுமொரு பிரிவினையை உண்டாக்கதிட்டமிட்டவர்.

இதில், ஜின்னாவை சேர்த்துக் கொண்டு, ஓர் ஆட்டம் போடலாம் என்று, முட்டி மோதி பார்த்தார்; ஒன்றும் நடக்கவில்லை என்றதும், பிராமண துவேஷத்தை கையில் எடுத்துக் கொண்டு, மக்களிடையே விஷ விதைகளை துாவியுள்ளார்.

அவரே சொன்னதுபோல், ஹிட்லரை முன்னுதாரணமாக கொண்டு, தமிழகத்தின் எல்லா தீமைகளுக்கும் காரணம், பார்ப்பனர் என்றும், அவர்களை விரட்ட வேண்டும் அல்லதுகொல்ல வேண்டும் என்று,1930ல், அவர் மேற்கொண்ட முயற்சியை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையால், அண்ணாதுரை போன்றோர் அவரைவிட்டு விலகியதால், அதன் தீவிரம் குறைந்து போனது.

அதன் நீட்சியாக, இன்றும் தமிழ் சினிமாவில் பிராமணர்களை கேவலப்படுத்துவது நிற்கவில்லை. சென்சார் விழித்துக்கொண்டு, ஒரு சமூகத்தின் மரியாதையை, 'டேமேஜ்' ஆகாமல் பார்த்துக் கொண்டால் நல்லது!



முதல்வர் படிக்க வேண்டும்!


ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர், அடிக்கடி, தன் தலைமையில் வெகு சிறப்பாக ஆட்சி நடைபெறுவதாக பெருமைப்பட்டுக் கொள்கிறார். தமிழகத்தின் உண்மை நிலையை அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, 'தினமலர்' நாளிதழில் வெளியாகும், 'இது உங்கள் இடம்' பகுதியை படிக்க வேண்டும்.

பொதுமக்கள், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரின் மனநிலையையும், இதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அத்துடன், பிரச்னைகளுக்கான தீர்வும், ஆலோசனைகளும் கிடைக்கும்!

உளவுத்துறைக்கு இணையான இப்பகுதியை தமிழக முதல்வர் படிப்பாரா?

****






      Dinamalar
      Follow us