/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த அ.தி.மு.க., மாஜி!
/
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த அ.தி.மு.க., மாஜி!
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த அ.தி.மு.க., மாஜி!
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த அ.தி.மு.க., மாஜி!
PUBLISHED ON : செப் 28, 2024 12:00 AM

''கசப்பான அனுபவங்களை சந்திக்கறா ஓய்...'' என, புதிர் போட்டபடியேபெஞ்சில் இடம் பிடித்தார் குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் ஆபீஸ்ல, உயர் பதவிக்கு,'இனிப்பான' ஒருத்தரை நியமிச்சிருக்கா... இவர், மருத்துவம் படித்து சிகிச்சை வழங்கக்கூடிய டாக்டராம் ஓய்...
''விதிகளின்படி, இவரை நிர்வாகப் பதவியில நியமிக்க முடியாதுங்கறா... ஆபீஸ் நிர்வாகத்துல இருக்கறவாளை, பதவி உயர்வு வழியா தான் இந்த பணியிடத் துல நியமிக்கணும் ஓய்...
''ஆனா, அதைஎல்லாம் துாக்கி கடாசிட்டு, டாக்டரை நியமிச்சுட்டதால, அவரது பந்தா தாங்க முடியல... 'தனக்கு மேல இருக்கற அதிகாரிகளை லவலேசமும்மதிக்க மாட்டேங்கறார்... நிர்வாக ரீதியாகவும் நிறைய குளறுபடிகளை பண்ணிண்டு இருக்கார்'னு துறைக்குள்ள எல்லாரும் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''துாத்துக்குடி கலெக்டர்ஆபீஸ்ல, வழக்கமா 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில ஈடுபடுவாங்க...'' என, அடுத்த தகவலை துவங்கிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''இப்ப, ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., பாண்டியன்உட்பட ஏழு போலீசாரை, ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு பணிக்கு நியமிச்சிருக்காங்க... இவங்களுக்கு மாசம், 15,000 முதல், 20,000 ரூபாய் சம்பளம்...
''கலெக்டருக்கு ஏற்கனவே ரெண்டு பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தாலும், பாண்டியன் அணி சபாரி டிரஸ்ல, அவங்களை, 'ஓவர்டேக்' பண்ணி, அதிகாரிகள் மத்தியில பந்தா காட்டு றாங்க... இந்த ஏழு பேருக்கும், 'பென்ஷன்' வருதுங்க...
''அதனால, 'படிச்சிட்டு,வேலையில்லாத இளைஞர்களுக்கு இந்த பணியை குடுத்தா, உபயோகமா இருக்குமே'ன்னு சகஅதிகாரிகள் புலம்புறாங்க...தான் ஆய்வுக்கு போற இடங்கள்ல, இளைஞர்களை ஊக்கப்படுத்தும் கலெக்டர், இதுல கவனம் செலுத்துவாரான்னு பார்க்கலாமுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கோஷ்டிப்பூசலை உருவாக்கிட்டாரேன்னு புலம்புதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், முன்னாள்எம்.எல்.ஏ., ராஜவர்மனுக்கு 2021 சட்டசபை தேர்தல்ல 'சீட்' தரலை... ஏற்கனவே, அ.ம.மு.க., வுக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வந்த இவர், அடுத்து தி.மு.க.,வா, பா.ஜ.,வான்னு ஒத்தையா, ரெட்டையா போட்டுட்டு இருந்தாரு வே...
''கடைசியா மதுரையைச் சேர்ந்த, 'மாஜி' அமைச்சர்உதயகுமாரை பிடிச்சு, பழனிசாமியை பார்த்துட்டாரு... உதயகுமார் சிபாரிசுல, ராஜவர்மனுக்கு மாநில ஜெ., பேரவை இணைச்செயலர் பதவியும் கிடைச்சிட்டு வே...
''பதவி வரும்போது பணிவு வரணுமுல்லா... விருதுநகர் அ.தி.மு.க.,வுல, ராஜேந்திர பாலாஜி, ரவிச்சந்திரன்னு ரெண்டு மாவட்ட செயலர்கள் இருக்காவ வே...
''இவங்களை மதிக்காம, 'பைபாஸ் ரூட்'ல பதவி வாங்கிய கெத்துல, தலைமைக்கு நன்றி தெரிவிச்சு மாவட்டம் முழுக்க, 'போஸ்டர், பிளக்ஸ் பேனர்'னு அமர்க்களப்படுத்தியிருக்காரு... அதுல, மாவட்டச்செயலர்களான ராஜேந்திர பாலாஜி, ரவிச்சந்திரன்படங்களை போடல வே...
''இதனால, ஆவேச மான அவங்க ஆதரவாளர்கள் போஸ்டர், பேனர்கள்ல இருந்த ராஜவர்மன் படங்களை கிழிச்சு எறிஞ்சுட்டாவ... 'மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே'ன்னு, உதயகுமார் மேல உள்ளூர் அ.தி.மு.க.,வினர் கடுப்புல இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.