/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
/
திருவள்ளூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்ய, வேளாண்மை துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கலாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், கோடை மழை பெய்து வரும் நிலையில், வரும் குறுவை மற்றும் சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயிகள் ஆயத்தமாக உள்ளனர். கடந்தாண்டு 63,256 ஏக்கரில் குறுவை, சொர்ணவாரி பட்டத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின், 2025 - -26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், நடப்பாண்டில் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சொர்ணவாரி பட்டத்தில், 65,000 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஏக்கருக்கு 20 கிலோ விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணுாட்டம் ஆகியவை 50 சதவீதம் மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.
மேலும், நெல் இயந்திரம் வாயிலாக நடவு செய்ய மானியமாக, 4,000 ரூபாய் என, மொத்தம் 28,460 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இத்திட்ட விநியோகத்திற்கு நெல் விதை 2.73 லட்சம் கிலோ, நுண்ணுாட்ட உரங்கள் 46,000 கிலோ, உயிரி உரங்கள் 10,823 லிட்டர் ஆகியவை, அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் நில ஆவணங்கள், ஆதார், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.