/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கட்டப்பஞ்சாயத்து வழக்கு அ.தி.மு.க., நிர்வாகி கைது
/
கட்டப்பஞ்சாயத்து வழக்கு அ.தி.மு.க., நிர்வாகி கைது
PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM
சென்னை,கடந்த 22ம் தேதி, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கூடத்தில், திருவான்மியூரைச் சேர்ந்த ராஜா, அவரது நண்பர்கள் ஐந்து பேர் மது அருந்தினர்.
அப்போது, அருகே மது அருந்திக் கொண்டிருந்த செல்வபாரதியிடம் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் மதுபாட்டிலால் தாக்கிக் கொண்டனர்.
நுங்கம்பாக்கம் போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட, மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாந்த், 33, விருகம்பாகத்தை சேர்ந்த கணேஷ்குமார், 42 உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.
கைதான பிரசாந்த், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலராக உள்ளார்.
ரியல் எஸ்டேட் நிறுவனத்தார் கொடுத்த புகாரில், அபிராமபுரம் போலீசார் கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பிரிவுகள் வழக்கு பதிந்து, பிரசாந்தையும், அவரது நண்பர் துரைசிங்கத்தையும், 40, நேற்று கைது செய்தனர்.