தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ போலீஸ் ஸ்டேஷனில் மது அருந்தி ரவுடி செய்த ரகளை!

 போலீஸ் ஸ்டேஷனில் மது அருந்தி ரவுடி செய்த ரகளை!

 போலீஸ் ஸ்டேஷனில் மது அருந்தி ரவுடி செய்த ரகளை!

2


PUBLISHED ON : ஆக 27, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏலக்காய் டீயை கையில் வாங்கியபடியே, “துணைவேந்தர் பதவிக்கு குறுக்கு வழியில முயற்சி பண்றாங்க பா...” என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

“எந்த பல்கலைக்கழகத்துல வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

“தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் பதவி காலியா இருக்கு... இந்த பதவிக்கு வர, 'குறைந்தபட்சம், 10 வருஷம் பேராசிரியரா இருந்திருக் கணும்... ஆராய்ச்சி பணிகள்ல ஈடுபட்டிருக்கணும்... முனைவர் பட்டம் வாங்கியிருக்கணும்'னு, நிறைய தகுதி வரம்புகள் இருக்குது பா...

“ஆனா, காட்டுப்பாக்கம் கால்நடை பண்ணை துறையில் முக்கிய பதவியில் இருப்பவரும், கால்நடை கல்லுாரி தலைவரா இருக்கிறவரும், துணைவேந்தர் பதவிக்கு முட்டி மோதுறாங்க... ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் மற்றும் உயர் அதிகாரிகளை பார்த்து, குறுக்கு வழியில பதவியை பிடிக்க, காய் நகர்த்திட்டு இருக்காங்க...

“அதே சமயம், 'எந்த விதிமீறலும் இல்லாம துணைவேந்தர் பதவியை நிரப்பணும்'னு, மூத்த பேராசிரியர்கள் பலரும் முதல்வருக்கு மனுக்கள் அனுப்பியிருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.

“டென்சிங், ராம்பிரபு உட்கார இடம் குடுங்க...” என்ற அந்தோணிசாமியே, “எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை வீசுறாருங்க...” என்றார்.

“யார் ஓய் அது...” என கேட்டார் குப்பண்ணா.

“தமிழகத்துல, சட்டசபை தேர்தல் முடிஞ்சு, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நேரத்துல, 'திருமாவளவனை முதல்வராக்கலாம்'னு ஒரு திட்டத்தை பலரும் சொன்னாங்க... அப்ப, காங்., தமிழக தலைவர் ஒருத்தருக்கும் முதல்வர் பதவி ஆசை வந்திருக்குதுங்க...

“அவர், 'திருமாவளவனை முதல்வராக்க பா.ம.க., சம்மதிக்காது... ஆனா, அதே சமூகத்தைச் சேர்ந்த என்னை முதல்வராக்கினா எல்லாரும் ஏத்துக்குவாங்க'ன்னு, அ.தி.மு.க., - தி.மு.க., தரப்பிடம் பேசியிருக்காரு... ஆனா, அவங்க கண்டுக்கலைங்க...

“இப்ப, கட்சி பதவியும் பறிபோய் தனிமையில் வாடும் அந்த தலைவர், தன் சமுதாயத்தைச் சேர்ந்த த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் ரெண்டு பேரை, தி.மு.க., முகாமுக்கு இழுக்க பேரம் பேசிட்டு இருக்காருங்க...” என்றார் அந்தோணிசாமி.

“செல்வப்பெருந்தகை இரும்... சேர்ந்து போலாம்...” என்ற குப்பண்ணாவே, “ரவுடியின் ரகளையை கேளுங்கோ ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...

“திருச்சி மாவட்டம், துறையூர்ல ஒரு ரவுடி இருக்கார்... இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கு... சில நாட்களுக்கு முன்னாடி, கத்தியை காட்டி சிலரை மிரட்டியதா, இவரை போலீசார் கைது பண்ணி துறையூர் ஸ்டேஷன்ல உட்கார வச்சிருக்கா ஓய்...

“அவர்கிட்டயே பணம் வாங்கி, தங்களுக்கு பிரியாணி வாங்கிய போலீசார், ரவுடிக்கு மது வாங்கி குடுத்திருக்கா... ஸ்டேஷன்லயே அதை ரவுடி குடிச்சிருக்கார்... அப்ப, ரவுடியை பார்க்க அவரது கள்ளக்காதலி வந்திருக்காங்க ஓய்...

“முழு போதையில் இருந்த ரவுடி, போலீசார் முன்னாடியே கள்ளக்காதலியை ஆபாசமா கொஞ்சி, பிரியாணி ஊட்டியிருக்கார்... அங்க வந்த வக்கீல் ஒருத்தர், 'பெண் போலீசார் இருக்கும் இடத்தில் இப்படி ஆபாசமா பேசலாமா'ன்னு, கேட்டிருக்கார் ஓய்...

“உடனே கோபமான ரவுடி, 'என்கிட்ட பிரியாணி வாங்கி திங்கற இவனுகளுக்கு என்ன மரியாதை'ன்னு சொல்லி, அங்கிருந்த சேர், மேஜையை எல்லாம் துாக்கி அடிச்சிட் டாரு... இதுல, ஒரு பெண் போலீஸ் வயித்துல காயமாகிடுத்து ஓய்...

“ரவுடியை எல்லா போலீசாரும் சேர்ந்து அமுக்கி, 'லாக்கப்'ல அடைச்சிருக்கா... காயமடைந்த பெண் போலீஸ் புகார் தந்தப்ப, 'நமக்கு தான் பிரச்னையாகும்'னு சொல்லி, ஸ்டேஷன் அதிகாரி புகாரை வாங்க மறுத்துட்டார் ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.

“வாங்க கருணாகரன்... உம்மை பார்த்ததும், வினோத் ஓட்டம் எடுத்துட்டாரு வே...” என பெரியசாமி அண்ணாச்சி கதை பேச, மற்றவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us