தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/10 வருஷங்களாக ஒரே பதவியில் கோலோச்சும் அதிகாரி!

10 வருஷங்களாக ஒரே பதவியில் கோலோச்சும் அதிகாரி!

10 வருஷங்களாக ஒரே பதவியில் கோலோச்சும் அதிகாரி!


PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெதுவடையை கடித்தபடியே, “போலீஸ் அதிகாரியை மாத்தணும்னு கேக்கறா ஓய்...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.

“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாண்ல, கார்த்திகை தீபம் ஏத்தணும்னு, போன வருஷம் ஐகோர்ட் உத்தரவு போட்டும், அப்ப ஆட்சியில் இருந்த தி.மு.க., அரசு, அதை மதிக்கல... ஹிந்து அமைப்புகள் போராட்டம், பக்தர் ஒருத்தர் தீக்குளித்து பலின்னு போன வருஷம் பெரிய ரணகளமாயிடுத்தோல்லியோ...

“வர்ற 24ம் தேதி திருக்கார்த்திகை வர்றது... ‘இந்த வருஷமாவது தீபத்துாண்ல தீபம் ஏத்தியே ஆகணும்’னு பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் சொல்றா ஓய்...

“கடந்த வருஷம், ஆளுங்கட்சியினர் பேச்சை கேட்டு, தீபம் ஏத்த முட்டுக்கட்டை போட்டு, ஐகோர்ட்டின் கண்டிப்புக்கு ஆளான போலீஸ் துணை கமிஷனர் இனியோ திவ்யன் தான், இந்த வருஷமும் திருப்பரங்குன்றம் பாதுகாப்பு பணியில் இருக்கார்... ‘இந்த வருஷமும் பக்தர்களிடம் அவர் கெடுபிடி காட்டுவார்... இதனால, தேவையில்லாத பிரச்னைகள் வந்து, த.வெ.க., அரசுக்கு தான் கெட்ட பெயர் வரும்’னு சொல்ற பக்தர்கள், ‘அவருக்கு பதிலா வேற அதிகாரியை நியமிக்கணும்’னு, கேக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“இன்னும் பங்களாக்களை காலி பண்ணலைங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

“திருப்பூர் கலெக்டரா இருந்த மனீஷ் நாரணவரேயை, சென்னைக்கும், டி.ஆர்.ஓ., கார்த்திகேயனை ஈரோடுக்கும், சில வாரங்களுக்கு முன்னாடி இடமாறுதல் பண்ணிட்டாங்க... இவங்களுக்கு பதிலா, புதிய அதிகாரிகளும் பொறுப்பு ஏத்துக்கிட்டாங்க...

“ஆனா, மாறுதல்ல போன ரெண்டு அதிகாரிகளும், திருப்பூர்ல தங்களது அரசு பங்களாக்களை இன்னும் காலி பண்ணல... பங்களாக்கள்ல இருக்கிற அவங்க குடும்பத்தினருக்கு, திருப்பூர் வருவாய் துறை அதிகாரிகள் இன்னும் சேவை பண்ணிட்டு இருக்காங்க...

“இதுல, மனீஷ் இதுக்கு முன்னாடி, தான் பணியாற்றிய பக்கத்து மாவட்டமான ஈரோடுக்கே மாறுதல் வாங்க முயற்சி பண்ணிட்டு இருக்கிறதால, பங்களாவை காலி பண்ணாம இருக்காரு... இதனால, புதுசா வந்திருக்கிற கலெக்டர், டி.ஆர்.ஓ., எல்லாம் அரசு சுற்றுலா விடுதியில தங்கியிருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.

“தொடர்ந்து, 10 வருஷங்களா ஒரே இடத்துல இருக்காரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“எந்த அதிகாரியை சொல்றீங்க பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“சென்னை மாநகராட்சியில், மாவட்ட சுகாதார அலுவலரா ஒரு அதிகாரி இருக்காரு... இந்த பதவிக்கு வர்றவங்க, ‘டிப்ளமா இன் பப்ளிக் ஹெல்த்’ என்ற படிப்பை படிச்சிருக்கணும்...

“அதுவும் இல்லாம, சென்னை மாநகராட்சியில் அஞ்சு வருஷம் உதவி சுகாதார அலுவலரா வேலை பார்த்திருக்கணும்... ஆனா, இப்ப இருக்கிற அதிகாரியிடம் இந்த ரெண்டு தகுதிகளுமே இல்ல வே...

“மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கியதா கணக்கு காட்டி பணத்தை எடுத்த அதிகாரி, அப்படி எந்த பயிற்சியும் வழங்கல... மாநகராட்சியில் இருக்கிற, 15 மண்டலங்கள்லயும் தனக்கு வேண்டிய சுகாதார அதிகாரிகளை, நாலஞ்சு வருஷங்களுக்கும் மேலா ஒரே இடத்துல பணிபுரிய அனுமதிச்சிருக்காரு...

“ஏன்னா, அ.தி.மு.க., – தி.மு.க., – த.வெ.க.,ன்னு மூணு ஆட்சிகள் மாறியும், இவரும் 10 வருஷங்களா அதே பதவியில் நீடிக்காரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“ஜெகதீசன் கிளம்பலாமா பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் எழுந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us