தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/முக்கிய புள்ளிக்கு முதல்வர் போட்ட தடை!

முக்கிய புள்ளிக்கு முதல்வர் போட்ட தடை!

முக்கிய புள்ளிக்கு முதல்வர் போட்ட தடை!

2


PUBLISHED ON : நவ 07, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெஞ்சில் அமர்ந்ததுமே, ‘‘பதவியை குறி வச்சு, தலை தீபாவளி கொண்டாடியிருக்கார் ஓய்...’’ என்றபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.

‘‘யாருக்குவே இந்த வருஷம் தலை தீபாவளி...’’ என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

‘‘முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் வர்ற முதல் தீபாவளி இது... தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வா இருந்து, சில மாசங்களுக்கு முன் த.வெ.க.,வில் சேர்ந்தவர், மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன்... இவர், திருமங்கலம் தொகுதி த.வெ.க., மாவட்டச் செயலர் பதவிக்கு குறி வச்சிருக்கார் ஓய்...

‘‘இதுக்காக, இந்த தொகுதியில இருக்கற கட்சி நிர்வாகிகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கறார்... சமீபத்துல, ‘விஜய் ஆட்சியின் தலை தீபாவளியை கொண்டாடுவோம்’ என்ற பெயர்ல, தொகுதியில் இருக்கற கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டவாளுக்கு சேலை, பேன்ட், சட்டை, இனிப்புகள், பட்டாசுகள்னு வாரி வழங்கியிருக்கார் ஓய்...

‘‘கட்சி நிர்வாகிகளிடம், ‘அடுத்து வர்ற உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல்ல த.வெ.க., வெற்றிக்கு ஒற்றுமையா இருந்து உழைக்கணும்’னு சொல்லியிருக்கார்... ‘கட்சி நிர்வாகிகளை கவனிக்கறது, மாவட்டச் செயலர் பதவி கிடைக்க உதவியா இருக்கும்’னு சரவணன் கணக்கு போடறார் ஓய்...’’என்றார் குப்பண்ணா.

‘‘தீபாவளி சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குல்லா...’’ என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

‘‘வழக்கமா, தீபாவளிக்கு அரசு ஆபீஸ்கள்ல அன்பளிப்புகள் நிறைய புழங்கும் என்பதால, லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில ஈடுபடுவாவ... இவங்களிடம் இருந்து தப்பிக்கிறதுக்காக, பெரம்பலுார் மாவட்ட அரசு ஊழியர்கள் பலரும், கடந்த சில நாட்களா கையெழுத்து போட மட்டுமே ஆபீஸ் வந்துட்டு போயிருக்காவ வே...

‘‘குறிப்பா, கனிமவளம், ஆர்.டி.ஓ., பத்திரப்பதிவு, தாலுகா ஆபீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்வாரிய அலுவலகங்கள்ல அதிகாரிகள் துவங்கி, ஊழியர்கள் வரை, கையெழுத்து போட்டுட்டு கிளம்பிட்டாவ... அதேநேரம், தீபாவளி அன்பளிப்புகளை வெளியிடங்களுக்கு வரவழைச்சு வாங்கிட்டு போயிட்டாவ வே...

‘‘அதிகாரிகளை தேடி வந்த மக்களிடம், ‘எல்லாரும் ஆய்வு பணிக்கு போயிட்டாவ... ‘மீட்டிங்’ போயிருக்காவ’ன்னு சொல்லி அங்கிருந்தவங்க சமாளிச்சிருக்காவ வே...’’ என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

‘‘முக்கிய புள்ளிக்கு தடை போட்டுட்டாங்க...’’ என்றார் அந்தோணிசாமி.

‘‘யாருக்கு பா...’’ என்றார் அன்வர்பாய்.

‘‘தமிழக அரசின் பல துறைகள்ல, கனிமவளம் மற்றும், ‘டாஸ்மாக்’ல தான் தினமும் பல கோடிகள் புரளும்... முதல்வருக்கு நெருங்கிய முக்கிய பிரமுகர், ஒரு கம்பெனியிடம் மதுபானங்கள் கொள்முதல் சம்பந்தமான, ‘டெண்டருக்காக’ திரைமறைவில் சமீபத்தில் பேச்சு நடத்தியிருக்காருங்க...

‘‘அதேபோல மணல், மண் உள்ளிட்ட கனிமவளங்களை எடுக்கிறதுல தி.மு.க., ஆட்சியில செல்வாக்கா இருந்த புதுக்கோட்டை புள்ளிகளை, இந்த ஆட்சியில ஓரங்கட்டி வச்சிருந்தாங்க... அவங்க மீண்டும் தலையெடுக்கிறதா, ஆளுங்கட்சி மேலிடத்துக்கு புகார்கள் போயிருக்குதுங்க...

‘‘இது முதல்வர் காதுக்கு வரவும், ‘கனிமவளம் மற்றும் மதுபான கொள்முதல் விவகாரங்கள்ல தலையிட வேண்டாம்’னு முக்கிய பிரமுகருக்கு தடை போட்டுட்டாராம்... அதுவும் இல்லாம, ‘மதுபானங்கள் கொள்முதல்ல வெளிப்படை தன்மை இருக்கணும்... எந்த சிபாரிசுகளையும் ஏத்துக்காதீங்க’ன்னும் துறையின் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்துடுச்சுங்க...’’ என முடித்தார் அந்தோணிசாமி.

‘‘விஷ்ணு இப்படி உட்காரும்...’’ என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us