தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மாமூலை வாரி வழங்கும் ஆந்திர மணல் லாரிகள்!

மாமூலை வாரி வழங்கும் ஆந்திர மணல் லாரிகள்!

மாமூலை வாரி வழங்கும் ஆந்திர மணல் லாரிகள்!


PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“துக்கம் விசாரிக்க வந்தவர், உற்சாகமா திரும்பி போயிருக்காருங்க...” என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

“யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய்.

“திருச்சி மாநகர் மாவட்டஅ.தி.மு.க., செயலரா இருக்கிறவர் சீனிவாசன்...ஜெ., ஆட்சியில, துணைமேயராகவும் இருந்திருக்காருங்க... இவரது சகோதரி கெஜலட்சுமி,திருச்செந்துார் கோவில்லசஷ்டி விரதம் இருந்து சுவாமி தரிசனம் முடிச்சுட்டு, ஊர் திரும்புற வழியில திடீர் மாரடைப்பால இறந்து போயிட்டாங்க...

“அவங்களது, 10வது நாள் காரியம் நடந்த அன்னைக்கு, துக்கம் விசாரிக்கவும், அவங்க படத்தை திறந்து வைக்கவும், பழனிசாமி திருச்சிக்கு வந்திருக்காருங்க... அப்ப, வழிநெடுக கட்சியினர், பொதுமக்கள்னு 12,000 பேருக்கு மேல திரண்டு நின்னு உற்சாக வரவேற்புகுடுத்திருக்காங்க... சிலர்,பழனிசாமியுடன், 'செல்பி'யும் எடுத்திருக்காங்க...

“சீனிவாசன் வீட்டுலபடத்தை திறந்து வச்சுட்டு,கட்சி நிர்வாகிகளிடம் பழனிசாமி பேசிட்டு இருந்திருக்காரு... அப்ப,'இந்த வரவேற்பை பார்த்ததும், 2026ல் கண்டிப்பா நாம ஆட்சி அமைச்சுடலாம்கிற நம்பிக்கை வந்துடுச்சு'ன்னுஉற்சாகமா சொல்லிட்டு போயிருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி.

“பறிமுதல் பண்ணின காரை, 'யூஸ்' பண்றா ஓய்...”என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“ஈரோடு எஸ்.பி., ஆபீஸ் வளாகத்துலயே,போதை பொருள் ஒழிப்புமற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆபீஸ்செயல்படறது... மூணு மாசத்துக்கு முன்னாடி, போதை பொருள் கடத்திட்டுவந்த மாருதி சுசூகி டிசையர்காரை பிடிச்சா ஓய்...

“இந்த காரை, மதுவிலக்கு ஆபீஸ் முன்னாடிகொஞ்ச நாளா நிறுத்தி வச்சிருந்தா... இப்ப, 'ரெய்டு' மற்றும் கண்காணிப்பு பணிக்கு போற மதுவிலக்கு போலீசார், இந்த காரை எடுத்துண்டு போறா ஓய்...

“இந்த மாதிரி பறிமுதல் செய்த காரை, வழக்கு முடியற வரைக்கும் யாரும் பயன்படுத்தப்படாது... ஆனா, போலீசாரை யார் தட்டிக்கேட்க முடியும்... அதே நேரம், 'இந்த கார் ஏதாவதுவிபத்துல சிக்குனா, நிறையபிராப்ளம் வரும்'னு எஸ்.பி., ஆபீஸ்ல இருக்கற போலீசார் புலம்பறா ஓய்...” என்றார்,குப்பண்ணா.

“ஆந்திரா லாரிகள்லஇருந்து கணிசமான மாமூல் கிடைக்குல்லா...”என, கடைசி மேட்டருக்குமாறினார் பெரியசாமி அண்ணாச்சி.

“யாருக்கு பா...” எனகேட்டார், அன்வர்பாய்.

“ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவுல இருந்து நகரிவழியா, தமிழக எல்லையான ஆற்காடு குப்பம்,கனகம்மாசத்திரம் வழியாசென்னைக்கு தினமும் அஞ்சு லாரிகள்ல, மணல்கடத்திட்டு வர்றாவ...

''இதை கண்டுக்காம இருக்க, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கும், தனிப்பிரிவு ஏட்டு மற்றும் உளவுத்துறை போலீசாருக்கும் தனித்தனியா மாசம் தலா, 40,000 ரூபாய் மாமூல் குடுத்துடுதாவ வே...

“சமீபத்துல, தீபாவளி பண்டிகை வந்ததால, எல்லா போலீசாருக்கும் தலா ஒரு பட்டாசு பாக்ஸ், ஸ்வீட், காரம், கவர்ல 1,000 ரூபாய் போட்டு குடுத்திருக்காவ...

''இதுபத்தி எல்லாம் எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்க வேண்டிய ஏட்டுக்கே, மாமூல் குவியுறதால, அவரும் எஸ்.பி., கவனத்துக்கு எதையும் எடுத்துட்டு போக மாட்டேங்காரு வே...” என முடித்தார், அண்ணாச்சி.

பெரியவர்கள் கிளம்ப,பெஞ்ச் அமைதியானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us