/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஜன.9 மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு
/
ஜன.9 மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு
ஜன.9 மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு
ஜன.9 மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு
PUBLISHED ON : நவ 21, 2025 05:29 AM

வேடசந்துார்: ''தே.மு.தி.க., சார்பில் ஜன.9 ல் நடைபெறும் மாநில மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்'' என தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா பேசினார்.
தே.மு.தி.க., சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 2011ல் 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த். அதேபோன்று 2026 தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். திண்டுக்கல் பெரிய கோட்டையாக இருந்தும் தே.மு.தி.க.,விற்கு இதுவரை ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
அதை வரும் தேர்தலில் முறியடிப்போம். ஜன.9ல் நடக்கும் மாநில மாநாட்டில் தே.மு.தி.க.,
எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு வெளியாகும்.
வேடசந்துாரைப் பொறுத்தவரை காவிரி நீரை கொண்டு வந்து குளங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. தே.மு.தி.க. பொறுப்புக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றும். வேடசந்துாரில் மின் மயானம், முருங்கை பதப்படுத்தும் நிலையத்தை முறையாக செயல்படுத்துவோம். தற்போது மத்திய அரசு மதுரை டூ கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற கோரி தே.மு.தி.க., சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு கடிதங்கள் அனுப்பப்படும் என்றார்.
பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே 'உள்ளம் தேடி இல்லம் நாடி' பிரசாரத்தில் பேசியதாவது:
தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சிகள் தான் ஆளுங்கட்சியாகவும், எதிராகவும் உள்ளன. ஆனால் அந்த கட்சிகளுக்கு இணையாக மூன்றாவது கட்சியாக நம் கட்சி உள்ளது.
கொடைக்கானல் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். பழநி- கொடைக்கானல் ரோப் கார் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இதுவரை தே.மு.தி.க., மாநாடுகளில் எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை. ஆனால் இன்றைக்கு சிலர் கூட்டம் நடத்தியதில் 41 பேர் இறந்துவிட்டார்கள் என்றார், தே.மு.தி.க., மாநில பொருளாளர் சுதீஷ் உடன் இருந்தார்.

