/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஓட்டுச்சாவடிகளில் உதவி மையம் துவக்கம் கணக்கீட்டு படிவம் வழங்கல், பூர்த்தி செய்ய உதவி
/
ஓட்டுச்சாவடிகளில் உதவி மையம் துவக்கம் கணக்கீட்டு படிவம் வழங்கல், பூர்த்தி செய்ய உதவி
ஓட்டுச்சாவடிகளில் உதவி மையம் துவக்கம் கணக்கீட்டு படிவம் வழங்கல், பூர்த்தி செய்ய உதவி
ஓட்டுச்சாவடிகளில் உதவி மையம் துவக்கம் கணக்கீட்டு படிவம் வழங்கல், பூர்த்தி செய்ய உதவி
PUBLISHED ON : நவ 21, 2025 04:47 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் தொகுதியில் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் தீவிர திருத்தம் குறித்த உதவி மையம் நேற்று துவக்கப்பட்டு விடுபட்ட வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவங்கள் ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கும் பணி நவ.4ல் துவங்கியது. படிவத்தை பூர்த்தி செய்து திருப்பி வாங்க ஓ.சா.அலுவலர்கள் 3முறை வாக்காளர்கள் வீடுகளுக்கு செல்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் நடைமுறையில் அனைத்து வாக் காளர்களையும் அடை யாளம் கண்டு படிவங்களை முழுவதுமாக கொடுக்க முடியவில்லை. மேலும் படிவங்கள் வாங்கி யவர்கள் பூர்த்தி செய்ய போதிய தகவல் இல் லாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முதல் ஓட்டுச்சாவடிகளில் உதவி மையம் செயல் படத்துவங்கியுள்ளது. கிராமங்களில் ஓட்டுச் சாவடி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர், கணினி ஆப்பரேட்டர் உள்ளிட்டோர் பணி யாற்றத் துவங்கியுள்ளனர்.
படிவங்கள் கிடைக்காத வாக்காளர்கள் வாங்கிச் செல்கின்றனர். மேலும் பூர்த்தி செய்ய தேவையான 2002 திருத்தத்திற்கான தகவல்களும் அளிக்கப் படுகிறது. அதற்கு மாவட்ட நிர்வாகம் அளித்து உள்ள 2002 திருத்தத்திற்கான இணைய வழிமூலம் தகவல்கள் எடுக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது.
திருப்புத்துார் பேரூராட்சிக்குள் 23 ஓட்டுச்சாவடிகளில் உதவி மையங்கள் செயல்படத்துவங்கின. 2002 ல் நடந்த திருத்தத்திற்கான தகவல்களை வழங்கும் பணி மிகவும் மெதுவாக நடக்கிறது. போதிய இணைய வேகம், இணைய தள சர்வர் வேகம் இல் லாததால் தகவல் எடுப்பது சிரமமாக உள்ளது.
பல ஓட்டுச்சாவடிகளில் அதற்கான கணினி ஆப்பரேட்டர்கள் இல்லை. மையத்தில் கட்சி முகவர்களும் வாக்காளர்களுக்கு உதவி செய்யத்துவங்கியுள்ளனர். இருப்பினும் நூற்றுக்கணக்கான படிவங்கள் போதிய முகவரி இல்லாமல் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தேங்கியுள்ளன.
நவ.23 வரை ஓட்டுச் சாவடிகளில் படிவம் வழங்கலும், பூர்த்தி செய்து திரும்பி சேகரித்தலும் நடைபெற உள்ளது. விடுமுறை நாட்களில் பூர்த்தி செய்ய கூடுதல் பணி யாளர் நியமித்தால் பணிகள் மேலும் வேகமெடுக்கும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தாசில்தார் மாணிக்க வாசகம் கூறுகையில், 'வாக்காளர்களிடம் தற்போது போதிய விழிப் புணர்வு உள்ளது.ஆர்வமாக படிவங்களை பூர்த்தி செய்ய துவங்கியுள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் நான்கு நாட்கள் நடைபெறும் இந்த பணியால் படிவங்கள் விரைவாக சேகரிக்கப்பட உள்ளது' என்றார்.

