/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
முகமூடி அணிந்து தந்தை, மகனை வெட்டிக்கொலை செய்ய முயற்சி
/
முகமூடி அணிந்து தந்தை, மகனை வெட்டிக்கொலை செய்ய முயற்சி
முகமூடி அணிந்து தந்தை, மகனை வெட்டிக்கொலை செய்ய முயற்சி
முகமூடி அணிந்து தந்தை, மகனை வெட்டிக்கொலை செய்ய முயற்சி
PUBLISHED ON : மார் 16, 2024 12:00 AM

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பள்ளிவாசல் தெருவில் முகமூடி அணிந்து தந்தை, மகனை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.
சக்கரக்கோட்டை அருகே பள்ளிவாசல்தெருவை சேர்ந்த முகமது பாரூக் 64. இவரது மகன் முகமது தமீம் 45, இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். மதியம் 3:30 மணிக்கு முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் இருவரையும் கத்தியால் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் வெட்டிக்காயம் ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றனர். இருவரும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.