/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கடற்கரை - வேளச்சேரி ரயில்கள் பூங்கா நகரில் மீண்டும் நிறுத்தம்
/
கடற்கரை - வேளச்சேரி ரயில்கள் பூங்கா நகரில் மீண்டும் நிறுத்தம்
கடற்கரை - வேளச்சேரி ரயில்கள் பூங்கா நகரில் மீண்டும் நிறுத்தம்
கடற்கரை - வேளச்சேரி ரயில்கள் பூங்கா நகரில் மீண்டும் நிறுத்தம்
PUBLISHED ON : நவ 12, 2024 12:00 AM

சென்னை, நசென்னை கடற்கரை ---- வேளச்சேரி மேம்பால ரயில்கள், நேற்று முதல் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால், பயணியர் நிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னை எழும்பூர் -- கடற்கரை வரை, நான்காவது புதிய பாதை அமைக்கும் பணி காரணமாக, சென்னை கடற்கரை -- சிந்தாதிரிப்பேட்டை இடையே, மின்சார ரயில் சேவை, கடந்த ஆண்டு ஆக., 27ல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், கடற்கரையில் இருந்து நேரடி ரயில் சேவை கிடைக்காமல், பயணியர் அவதிப்பட்டனர்.
இதற்கிடையில், 14 மாதங்களுக்கு பின், கடற்கரை -- வேளச்சேரி இடையே மேம்பால ரயில் சேவை, கடந்த 29ம் தேதி துவங்கியது. இதனால், பயணியர் நிம்மதி அடைந்தனர். இருப்பினும், பூங்கா நகர் நிலையத்தில் ரயில் நிற்காமல் சென்றது, பயணியருக்கு ஏமாற்றமாக இருந்தது.
இந்நிலையில், பூங்கா நகர் ரயில் நிலையத்தில், பயணியருக்கான வசதிகள் செய்யும் பணி முடிந்துள்ளதால், சென்னை ரயில் கோட்டத்தின் உத்தரவை தொடர்ந்து, கடற்கரை -- வேளச்சேரி மேப்பால மின்சார ரயில்கள், நேற்று முதல் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால், பயணியர் நிம்மதி அடைந்துள்ளனர்.