/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைக்கு தி.மு.க., புள்ளி இடையூறு!
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைக்கு தி.மு.க., புள்ளி இடையூறு!
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைக்கு தி.மு.க., புள்ளி இடையூறு!
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைக்கு தி.மு.க., புள்ளி இடையூறு!
PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM

பில்டர் காபியை பருகியபடியே, ''இப்பவேதீபாவளி கொண்டாட ஆரம்பிச்சுட்டா ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாநகராட்சியில், 60 வார்டுகள் இருக்கு... பக்கத்துல இருக்கற நகராட்சிகள்,ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கற 'பிளான்'ல, திருமுருகன்பூண்டி நகராட்சியையும்இணைக்கப் போறதா தகவல்கள் பரவித்து ஓய்...
''இதை கேள்விப்பட்டு,நகராட்சியில, 'வளமா' இருக்கற ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர், 'ஷாக்' ஆகிட்டா...மாநகராட்சியுடன் சேர்த்துட்டா, தங்களது, 'மாமூல்' வாழ்க்கை பாதிக்கப்படுமேன்னு கவலைப்பட்டா ஓய்...
''இந்த சூழல்ல, மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகளின் உத்தேச பட்டியல்சமீபத்துல வெளியானது...அதுல, திருமுருகன்பூண்டி பெயர் இல்ல... இதை பார்த்துட்டு, ஆளுங்கட்சியினர் இப்பவே தீபாவளி கொண்டாட துவங்கிட்டாஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மொத்த பைல்களையும்தோண்டி எடுக்கிறாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''காஞ்சிபுரம் மாவட்டவருவாய் துறையில, ஒரு பெண் அதிகாரி அஞ்சு மாசம் மட்டுமே பணியில இருந்தாங்க... இவங்க, பணியில சேர்ந்தது முதலே,சக அதிகாரிகள், கீழ்நிலை ஊழியர்களை மதிக்காம அடாவடியா நடந்துக்கிட்டாங்க பா...
''மேலிடம் வரை புகார்கள் போனதால, கடந்த ஜூன் மாசம், அவரை மாத்திட்டாங்க...இந்த சூழல்ல, தமிழ் வழியில் படிச்சதா போலிசான்றிதழ் கொடுத்து குரூப் - 1 பணியில் சேர்ந்ததா, சமீபத்துல அந்த பெண் அதிகாரி உள்ளிட்ட சிலர், மேல மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க பா...
''இதை கேள்விப்பட்டு,வருவாய் துறை மேலிடத்துக்கு பயங்கரஅதிர்ச்சி... இப்ப, அஞ்சுமாசத்துல பெண் அதிகாரி கையெழுத்து போட்ட பைல்கள் எல்லாத்தையும் ஆராய, உயரதிகாரிகள் உத்தரவுபோட்டிருக்காங்க... இதனால, அந்தம்மாவுக்குஜால்ரா போட்டுட்டு இருந்ததாசில்தார்கள் உட்பட பலரும் கலக்கத்துல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைக்கு மறைமுகமா நெருக்கடி தர்றாரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டசபை தொகுதியில், பா.ஜ., பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலர் வெங்கடேசன்குடியிருக்காரு... தி.மு.க., - அ.தி.மு.க., வுலஓரங்கட்டப்பட்டு விரக்தியில இருக்கிறவங்களை, வீடு தேடி போய் பா.ஜ.,வுல சேர்த்துட்டு இருக்காரு வே...
''இது, தொகுதி ஆளுங்கட்சி புள்ளிக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு... இதனால, வெங்கடேசன் மேல இருக்கிற வழக்குகளை வச்சு, அவருக்கு குடைச்சல் குடுக்க துவங்கிட்டாரு வே...
''அதாவது, உறுப்பினர்சேர்க்கை முகாம் நடக்கிறநாளா பார்த்து, செங்குன்றம் போலீசார், வெங்கடேசனை விசாரணைக்கு கூப்பிடுதாவ... நாள் முழுக்க ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டு, சாயந்தரமா அவரது மனைவி, மகன்,மகளின் ஆதார், பாஸ்போர்ட் விபரங்களைவாங்கிட்டு வீட்டுக்கு அனுப்பிடுதாவ வே...
''இதனால, உறுப்பினர்சேர்க்கை பணி பாதிக்கப்படுது... மருத்துவம் படிக்கிற அவரது மகன், மகளுக்கு மன உளைச்சல் ஏற்படுது... இது சம்பந்தமா,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய மனித உரிமை கமிஷனுக்கு வெங்கடேசன்புகார் அனுப்பியிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.