sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

நெடுஞ்சாலை ஹோட்டல்களை மிரட்டும் புரோக்கர்கள்!

/

நெடுஞ்சாலை ஹோட்டல்களை மிரட்டும் புரோக்கர்கள்!

நெடுஞ்சாலை ஹோட்டல்களை மிரட்டும் புரோக்கர்கள்!

நெடுஞ்சாலை ஹோட்டல்களை மிரட்டும் புரோக்கர்கள்!

1


PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அரசு, 50 ஏக்கர் நிலத்தை மீட்கணும்னு கேட்கிறாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை கையில் வாங்கினார் அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சென்னையில், கிண்டி ரேஸ் கிளப் வசமிருந்த நிலத்தை, சமீபத்துல தமிழக அரசு மீட்டுச்சே... இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்துள்ள பார்வதிபுரத்தில், ஒரு குறிப்பிட்டபயனாளிகளுக்கு கேரளா மன்னர் இனாமா வழங்கிய, 50 ஏக்கர் நிலம் இருக்குது பா...

''அந்த நிலம், இப்ப பயனாளிகளிடம் இல்லாம, தனியார்வசம் இருக்குது... அந்த நிலத்தை சட்டரீதியா மீட்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் அரசுக்கு தோல்வி தான் கிடைச்சது பா...

''இப்ப, மொத்த நிலத்தையும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் கைப்பற்றி விற்கும்முயற்சியில ஈடுபட்டிருக்காங்க... ஆனா,'தமிழக அரசு, உச்ச நீதிமன்ற பெஞ்சில் மேல்முறையீடு செய்தாலே அந்த நிலத்தை மீட்க முடியும்'னு, சமூகநல ஆர்வலர்கள் சொல்றாங்க பா...

''இதுக்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பியிருக்காங்க... அதுல, 'நாகர்கோவிலையும், கன்னியாகுமரி மாவட்டத்தின் இதர பகுதிகளையும் இணைக்கும் பாலமா பார்வதிபுரம் இருக்குது...இப்ப, கலெக்டர் ஆபீஸ், நகரின் மையத்துல மூச்சு திணறிட்டு இருக்குது... இந்த, 50 ஏக்கரை மீட்டு, அங்க கலெக்டர் ஆபீஸ் கட்டலாம்'னு குறிப்பிட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''போக மாட்டோம்னு முரண்டு பிடிக்கறா...'' என்றார், குப்பண்ணா.

''யாரு, எங்க போக மாட்டேங்காவ வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''திருவனந்தபுரம் ஏர்போர்ட் தீயணைப்பு பிரிவுல இருக்கற சிலரை, போன ஜூலை மாசம், வேற ஏர்போர்ட்களுக்கு டிரான்ஸ்பர் பண்ணியிருக்கா... இப்படி, சென்னைக்கு ஆறு பேரை மாத்தியிருக்கா ஓய்...

''இங்க இருக்கறசிலரையும், வேற ஏர்போர்ட்டுக்கு மாத்தியிருக்கா... ஆனா, 'ஆர்டர்' வந்தும், இங்க இருக்கற பழைய ஆட்கள், 'நாங்க மத்த எடத்துக்கெல்லாம் போக மாட்டோம்'னு முரண்டு பிடிக்கறா ஓய்...

''இதனால, திருவனந்தபுரத்துல இருக்கறவாளும் இங்க வந்து ஜாயின் பண்ண முடியல...இங்க இருக்கற உயர் அதிகாரியும், 'எப்படியும் போய் தொலைங்க'ன்னு விட்டுட்டார்...'' என்றார், குப்பண்ணா.

''ஹோட்டல் நடத்துறவங்களை மிரட்டுதாங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லியில் இருந்து பாலுச்செட்டிசத்திரம் வரை நிறைய ஹோட்டல்கள் இருக்கு... இங்க, சில புரோக்கர்கள் போய் மிரட்டுதாங்க வே...

''அதாவது, 'தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள இடங்களை பயன்படுத்த, அனுமதி வாங்கணும்'னு சொல்லி ஒரு லட்சம், 2 லட்சம் ரூபாய் தரணும்னு பேரம் பேசுதாங்க... அனுமதி வாங்காம இருக்கவும், அதிகாரிகளை சமாளிக்கவும் இந்த தொகையை தரணும்னு கேட்காவ வே...

''அதுவும் இல்லாம, 'பணம் தராட்டி, உங்க கடைக்கு முன்னாடி பள்ளம் தோண்டி வியாபாரத்தை கெடுப்போம்'னு சொல்லுதாவ... இது பத்தி, காஞ்சிபுரம் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் தெரிவிச்சும், எந்த தீர்வும் கிடைக்கல...

''இதனால, 'தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளே, புரோக்கர்களை அனுப்பி இப்படி மிரட்டி வசூல் பண்ணுதாங்களோ'ன்னு ஹோட்டல் உரிமையாளர்கள் சந்தேகப்படுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us