/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கண்புரை அறுவை சிகிச்சை மேடவாக்கத்தில் தேர்வு முகாம்
/
கண்புரை அறுவை சிகிச்சை மேடவாக்கத்தில் தேர்வு முகாம்
கண்புரை அறுவை சிகிச்சை மேடவாக்கத்தில் தேர்வு முகாம்
கண்புரை அறுவை சிகிச்சை மேடவாக்கத்தில் தேர்வு முகாம்
PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM
மடிப்பாக்கம் மடிப்பாக்கம், ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதியுடன், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம், வரும் ஜூன் 1ம் தேதி, மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம், ஆறாவது தெருவில் உள்ள சமிதியில் நடக்கிறது.
காலை 8:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடக்கும் இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் ஏழை, எளியோருக்கு, சங்கரா கண் மருத்துவமனையில் விழி 'லென்ஸ்' பொருத்தப்படுகிறது.
அறுவை சிகிச்சை, போக்குவரத்து வசதி, தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசம். கண்புரை உள்ளவர்கள், முகாம் அன்றே அறுவை சிகிச்சைக்கு செல்ல தயாராக வரவேண்டும். சிகிச்சை முடிந்த பின், முகாம் நடந்த இடத்தில் கொண்டு விடப்படுவர்.
சிகிச்சை மேற்கொள்ள விரும்வோர், ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இருதய நோய் உள்ளோ மருந்து, மருந்து சீட்டு எடுத்து வர வேண்டும்.
தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயர் கண் சிகிச்சை பெறுவோரும் அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு, முகாம் ஒருங்கிணைப்பாளர்களின், 97109 10542, 82209 57937 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

