/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பரிசு பெற்ற மாணவர்களிடம் பணம் பறித்த 'கோச்'கள்!
/
பரிசு பெற்ற மாணவர்களிடம் பணம் பறித்த 'கோச்'கள்!
PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM

''கோவைக்கு கேட்டா, பாலக்காடுக்கு போகுது பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''என்னது வே...'' எனகேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''மயிலாடுதுறையில் இருந்து பொள்ளாச்சி வழியா, கோவைக்கு ரயில் இயக்கணும்னு பயணியரும், மக்கள்பிரதிநிதிகளும் ரயில்வேக்குநீண்ட நாட்களா கோரிக்கை வச்சாங்க... இப்ப, 'மயிலாடுதுறையில் இருந்து பொள்ளாச்சி வழியா பாலக்காடுக்கு ரயில் இயக்கலாமா'ன்னு ரயில்வே நிர்வாகம், மக்களிடம் கருத்து கேட்டிருக்குது பா....
''இது, பொள்ளாச்சி,கிணத்துக்கடவு, கோவைபயணியரை அதிர்ச்சிக்குஉள்ளாக்கியிருக்கு... 'நாம எந்த ரயில் கேட்டாலும், அது பாலக்காடுக்கு தான் போகுது... கோவைக்கு ரயில் இயக்குறதுல என்ன சிரமம்...
''இந்த ரயிலும் பாலக்காடுக்கு போயிட்டா பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை பயணியருக்கு உட்கார கூட இடம் இருக்காது... பொள்ளாச்சி எம்.பி.,யா யார் இருந்தாலும், ரயில்வேக்கு கடிதம் அனுப்புறதோட முடிச்சுக்கிறாங்க... டில்லியில வாதாடி, போராடி ரயில்களை வாங்கிட்டு வர மாட்டேங்கிறாங்க'ன்னு பயணியர் தரப்பு புலம்புது பா...'' என்றார், அன்வர்பாய்.
''நேரத்துக்கு வராம, சோதிக்கறார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறியகுப்பண்ணாவே தொடர்ந்தார்...
''உயர்கல்வி துறைக்குபுதிய அமைச்சரா வந்திருக்கற கோவி.செழியன், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார் எம்.எல்.ஏ.,வா இருக்கார்... போன மாசம்காந்தி ஜெயந்தி அன்னைக்கு தஞ்சை கலெக்டர் ஆபீசுக்கு ஆய்வுக்கு வரதா சொல்லியிருந்தார் ஓய்...
''அன்னைக்கு அரசு விடுமுறையா இருந்தாலும்,எல்லா அதிகாரிகளையும்ஆஜராகும்படி கலெக்டர்உத்தரவு போட்டிருந்தார்...இதன்படி, எல்லாரும் வந்திருந்தா ஓய்...
''ஆனா, அமைச்சர்ஒன்றரை மணி நேரம் லேட்டா வந்துட்டு, உடனே கிளம்பிட்டார்...பேரிடர் மேலாண்மை ஆய்வு கூட்டத்துக்கும் ரெண்டு மணி நேரம் லேட்டா தான் வந்தார் ஓய்...
''பட்டமளிப்பு விழா, ஆய்வு கூட்டம்னு எதுவாஇருந்தாலும், சொன்ன நேரத்துக்கு அமைச்சர்வரதே இல்ல... இதனாலஅதிகாரிகள், ஊழியர்கள்எல்லாம் சாப்பிடக் கூட போகாம பட்டினியா காத்து கிடக்கறா ஓய்...
''எல்லாத்துக்கும் மேல, யார் போன் அடிச்சாலும், அமைச்சர் எடுக்கறதே இல்ல... இதனால, அமைச்சர் மீது மாவட்ட மக்களும், அதிகாரிகளும் பயங்கர அதிருப்தியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஏழை மாணவர்களிடம்பணம் வசூலிக்கிறாங்க...''என்றார், அந்தோணிசாமி.
''யார் ஓய் அது...'' எனகேட்டார், குப்பண்ணா.
''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்புல, முதல்வர் கோப்பைக்கானவிளையாட்டு போட்டிகளை நடத்தி முடிச்சிருக்காங்களே... இதுல பள்ளி - கல்லுாரி மாணவர்களுக்கு தனி நபர், குழு விளையாட்டுபோட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவங்களுக்கு, 50,000 மற்றும்1 லட்சம் ரூபாய்னு ரொக்கபரிசு குடுத்திருக்காங்க...
''ஏழ்மை நிலையில இருக்கிற பல மாணவர்களின் கல்வி செலவுக்கு இந்த தொகை பெரும் உதவியா இருக்குது... ஆனாலும், இவங்களுக்குபயிற்சி தந்த, 'கோச்'கள் சிலர், பரிசு தொகையில,10 சதவீதத்தை கமிஷனாக, கறாராக கேட்டு வாங்கிடுறாங்க... கோச்களை பகைச்சுக்கவிரும்பாம, பல மாணவர்களும் பணம் குடுத்திருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.