/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சரிந்து விழுந்த கால்வாய் தடுப்புச்சுவர்
/
சரிந்து விழுந்த கால்வாய் தடுப்புச்சுவர்
PUBLISHED ON : ஜன 01, 2025 12:00 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்றம், மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர், வேகவதி ஆற்றில் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயில் செடி, கொடிகள், கோரை புற்கள் வளர்ந்து இருந்தன.
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், இக்கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் பெய்த மழைக்கு கால்வாயில் சென்ற மழைநீரால், அய்யப்பா நகர் எதிரில், மண் அரிப்பு ஏற்பட்டு கால்வாயின் தடுப்புச்சுவரின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு, கால்வாய் அருகில் உள்ள மின்கம்பங்களும் சாய்ந்து விழும் சூழல் உள்ளது. எனவே, தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.