தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் நடத்தும் கமிஷன் வசூல்!

 நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் நடத்தும் கமிஷன் வசூல்!

 நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் நடத்தும் கமிஷன் வசூல்!


PUBLISHED ON : மே 07, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2026 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏலக்காய் டீயை பருகியபடியே, ''கிட்டத்தட்ட, 2 கோடி ரூபாயை, 'ஆட்டை' போட்டுட்டாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''யாருகிட்ட வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''ராமநாதபுரம் தொகுதியில், தி.மு.க., மாவட்ட செயலரான முத்துராமலிங்கம் போட்டி யிட்டாரு... கீழக்கரை நகராட்சியில், 21,000 ஓட்டுகள் இருக்குது பா...

''இங்க பெரும் பாலும் முஸ்லிம்களே இருக்கிறதால, தி.மு.க.,வின் கோட்டையாவே இருந்துச்சு... இந்த பகுதியில், ஓட்டுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் பட்டுவாடா பண்ணும்படி, முத்துராமலிங்கம் தரப்புல, கீழக்கரை நகராட்சி கவுன்சிலர்கள் சிலரிடம், 2 கோடி ரூபாயை குடுத்திருக்காங் க பா...

''கவுன்சிலர்கள் தரப்போ, 'முஸ்லிம்கள் எல்லாம் நமக்கு தான் ஓட்டு போடுவாங்க... அதனால, அவங்களுக்கு பணம் தர வேண்டாம்'னு முடிவு பண்ணி, பணத்தை அமுக்கிட்டாங்க பா...

''இதனால, பணம் கிடைக்காத பலரும், இந்த முறை த.வெ.க.,வுக்கு ஓட்டு போட்டுட்டாங்க.. . கீழக்கரையில் தி .மு.க.,வுக்கு குறைவான ஓட்டுகளே விழுந்திருக்குது... தேர் தல்ல, முத்துராமலிங்கம் ஜெயிச்சிட்டாலும், கீழக்கரை கவுன்சிலர்கள் மீது கடும் அதிருப்தியில இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.

''பி.எப்., பணத்தை முறையா கட்டணும்னு சொல்றாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் எல்லாமே, மாநில பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படுது.... இதுல, கூட்டுறவு பண்டகசாலை, நுகர்வோர் பண்டகசாலை, வேளாண்மை விற்பனை சங்கம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்னு பல சங்கங்கள் இருக்குதுங்க...

''இந்த சங்கங்கள்ல, முக்கிய பொறுப்புல இருக்கிற அதிகாரிகளுக்கு மட்டுமே, பி.எப்., பணத்தை, அதே க ணக்கில் கட்டுறாங்க... மற்ற ஊழியர்களது சம்பளத்தில் பி.எப்., தொகை பிடிச்சாலும், பி.எப்., கணக்குல கட்டாம, கூட்டுறவு வங்கி கணக்குலயே கட்டுறாங்க...

''இதனால, அவங்களுக்கு குறைவான வட்டிதான் கிடைக்குது... எதிர்காலத்துல அவங்க ஓய்வு பெற்றதும், பி.எப்., ஓய்வூதியமும் கிடைக்காது... இதனால, 'எங்களிடம் பிடிக்கிற பணத்தை முறைப்படி, பி.எப்., கணக்குல செலுத்தணும்'னு, ஊழியர்கள் எல்லாம் வலியுறுத்திட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''நிலம் கையகப்படுத்த கமிஷன் வசூலிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து அன்னுார் வழியா மேட்டுப்பாளையம் வரை, 238 கோடி ரூபாய்ல, நான்குவழி சாலை அமைக்கற பணிகள் துவங்கியிருக்கு... இதுக்காக, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த இருக்கா ஓய்...

''நிலம் கையகப்படுத்த நியமிக்கப்பட்டிருக்கற, வருவாய்த் துறை மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்ல சிலர், நில உரிமையாளர்களிடம் போய், 'உங்களது நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு வாங்கி தரோம்'ன்னு சொல்லி, கமிஷன் வசூல் பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us