/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அங்கன்வாடி செல்லும் வழியில் கட்டுமான பொருட்களால் அச்சம்
/
அங்கன்வாடி செல்லும் வழியில் கட்டுமான பொருட்களால் அச்சம்
அங்கன்வாடி செல்லும் வழியில் கட்டுமான பொருட்களால் அச்சம்
அங்கன்வாடி செல்லும் வழியில் கட்டுமான பொருட்களால் அச்சம்
PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

திருவாலங்காடு, வேளாண் கட்டடம் கட்டும் பணிக்காக வந்துள்ள இரும்பு கம்பி, ஜல்லிக் கற்கள், மண் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், அங்கன்வாடி மையம் செல்லும் வழியில் போடப்பட்டுள்ளதால், குழந்தைகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
திருவாலங்காடில் உள்ள வட்டார வேளாண் அலுவலகம், 1972ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது, இக்கட்டடம் பழுதடைந்துள்ளது.
கடந்த ஜனவரியில் கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டடம் கட்ட, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்த பணிக்காக ஜல்லிக் கற்கள், இரும்பு கம்பிகள், மண் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், அங்கன்வாடி மையம் செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கன்வாடி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:
அங்கன்வாடி மையம் செல்லும் வழியில் இரும்பு கம்பி, ஜல்லிக் கற்கள் போட்டுள்ளனர். குழந்தைகள் தனியாக நடந்து சென்றால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், அங்கன்வாடிக்கு குழந்தைகளை, பெற்றோர் துாக்கி சென்று வருகின்றனர்.
'கட்டுமான பொருட்களை வேறு இடத்தில் வைத்து பணி செய்யுங்கள்' எனக் கூறியும், தற்போது வரை அகற்ற முன்வரவில்லை. 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.