/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தொடர் மழை; 14 அடியை எட்டிய காமராஜர் அணை
/
தொடர் மழை; 14 அடியை எட்டிய காமராஜர் அணை
PUBLISHED ON : நவ 26, 2025 04:28 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஆத்துார் காமராஜர் அணையில் ஒரே நாளில் 3 அடி தண்ணீர் உயர்ந்து 14 அடியை எட்டி உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணையின் நீரே திண்டுக்கல்லில் சில வார்டுகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 23.5 அடி கொண்ட இந்த அணை முழு அளவு எட்டி மறுகால் பாயும்போது திண்டுக்கல், வேடசந்தூர் தொகுதி, கரூர் மாவட்டத்தின் சில விவசாய நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளது.
2024 அக். இறுதிக்குள் பருவமழை காரணமாக 4 முறை காமராஜர் அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. ஆனால் இந்தாண்டு நவ. ஆகியும் முழு அளவை ஒருமுறை கூட எட்டவில்லை.
நவ.23 நிலவரப்படி அணையில் 11 அடி நீர் இருந்தது. தொடர் மழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 14 அடியை எட்டி உள்ளது.
மழையால் சாய்ந்த மரம் வேடசந்துார்: -- வடமதுரை ரோட்டில் பி.வி.எம்., மெட்ரிக் பள்ளி அருகே புளியமரம் ஒன்று இருந்தது. மழை காரணமாக நேற்று அதிகாலை மரம் வேரோடு சாய்ந்தது. தனியார் பள்ளி சுற்றுச்சுவர், கேட் சேதமடைந்தது. நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத் துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.

