தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மடைமாறும் ஒன்றிய நிதியால் கவுன்சிலர்கள் கவலை!

மடைமாறும் ஒன்றிய நிதியால் கவுன்சிலர்கள் கவலை!

மடைமாறும் ஒன்றிய நிதியால் கவுன்சிலர்கள் கவலை!


PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கருப்பட்டி காபியை பருகியபடியே,“முதல்வரின் கனவுக்கு வேட்டு வச்சிடுவாவ போல தெரியுது வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமிஅண்ணாச்சி.

“என்ன சமாச்சாரம் பா...” என கேட்டார், அன்வர்பாய்.

“போன சட்டசபை தேர்தல்ல, கோவை மாவட்டத்துல, 10 சட்டசபை தொகுதிகள்லஒண்ணுல கூட தி.மு.க., ஜெயிக்கலல்லா... இதனால, வர்ற தேர்தல்ல, 10 தொகுதிகளையும் அள்ளிடணும்னுமுதல்வர் ஸ்டாலின் பிளான் போட்டுட்டு இருக்காரு வே...

“ஆனா, அவரது கட்சியினர் செயல்பாடுகள்,அதுக்கு ஏத்த மாதிரி இல்ல... சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர்கள்ல ஒருத்தர், கறாரா வசூல் வேட்டை நடத்துதாரு வே...

“அதாவது, கோவில் வளாகத்துல பூக்கடை வச்சிருக்கிறவங்க, கோவில்அர்ச்சகர்கள், ஓதுவார்கள்னு யாரையும் விட்டு வைக்காம, பணத்தை கறந்துடுதாரு... ஆளுங்கட்சி பிரமுகர் மற்றும் அறங்காவலரா இருக்கிறதால, அவரை பகைச்சுக்க விரும்பாம, அவர் கேட்கிறப்ப எல்லாம் பணத்தை குடுத்துடுதாவ...அவர் இதுவரைக்கும் வசூலிச்சதை கணக்கு போட்டு பார்த்தா, பல லட்சங்களை தாண்டும் வே...” என்றார், அண்ணாச்சி.

“டிரைவரை பழிவாங்குறாருங்க...” என, அடுத்ததகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

“யாரு வே அது...” எனகேட்டார், அண்ணாச்சி.

“துாத்துக்குடி கலெக்டர்ஆபீஸ் வளாகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்இயங்குதுங்க... இங்க இருக்கிற அதிகாரி ஒருத்தர்,தனக்கு அரசு தந்திருக்கிறபொலீரோ ஜீப்பின் டிரைவரை ஓரங்கட்டிட்டு,தனியா டிரைவரை போட்டிருக்காருங்க...

“இது சம்பந்தமான பிரச்னை, கலெக்டர் காதுக்கு போய், அவர் அதிகாரியை எச்சரித்த பிறகும், தனி நபரை தான் இன்னும் டிரைவரா பயன்படுத்திட்டு இருக்காருங்க... அதேநேரம், 'அரசு டிரைவர் தினமும்ஆபீசுக்கு வந்து கையெழுத்து போட்டுட்டு,சும்மா இருந்துட்டு போகணும்'னும் அதிகாரி உத்தரவு போட்டிருக்காருங்க...

“அரசு டிரைவரோ, 'அதிகாரியின் தில்லுமுல்லுக்கு நான் வளைஞ்சுகுடுக்க மறுத்துட்டதால,என்னை பழிவாங்குறார்'னு உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பிட்டு, நடவடிக்கைக்காககாத்துட்டு இருக்காருங்க...”என்றார், அந்தோணிசாமி.

“ஒன்றிய நிதியை மடைமாத்தி விடறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“சேலம் மாவட்டத்தில்,20 ஒன்றியங்கள் கட்டுப்பாட்டுல வர்ற 385 ஊராட்சிகள்ல ஏராளமானதுவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இருக்கு... இந்த பள்ளி கட்டடங்களை பராமரிக்க, பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் அரசு நிதி ஒதுக்கும் ஓய்...

“நடப்பு நிதியாண்டுல,பள்ளி கட்டடம், சத்துணவு கூடம், கழிப்பறைகள் பராமரிப்புக்கு, 11 கோடி ரூபாய் மதிப்புல, 241 பணிகளை தேர்வு செஞ்சிருக்கா... இதுல, பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 2.67 கோடியிலும், அந்தந்த ஒன்றியங்களின் பொது நிதியில், 8.33 கோடி ரூபாயிலும் பணிகளை செய்யும்படி அதிகாரிகள் உத்தரவு போட்டிருக்கா ஓய்...

“ஒன்றிய பொது நிதியில,தங்களது வார்டுகள்ல பல பணிகளை செய்யணும்னு ஆளுங்கட்சி சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் பலரும் பட்டியல்தயார் பண்ணி, காத்துண்டுஇருந்தா... இப்ப பள்ளிகளை பராமரிக்க பொது நிதியை செலவிட சொல்றதால, 'வார்டு மக்கள் முகத்துல எப்படி முழிக்கறது'ன்னு கவுன்சிலர்கள் எல்லாம்புலம்பறா ஓய்...” எனமுடித்தார், குப்பண்ணா.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us