/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாமல்லையில் சுகாதார சீர்கேடுகள் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
/
மாமல்லையில் சுகாதார சீர்கேடுகள் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
மாமல்லையில் சுகாதார சீர்கேடுகள் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
மாமல்லையில் சுகாதார சீர்கேடுகள் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
PUBLISHED ON : மார் 01, 2024 12:00 AM

மாமல்லபுரம்,:மாமல்லபுரம் பேரூராட்சி சாதாரண கூட்டம், தலைவர் வளர்மதி தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் கணேஷ், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டாக, திடக்கழிவு மேலாண்மை துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம், தேவைக்கேற்ப ஊழியர்களை நியமிக்காமல், பணிகளை அரைகுறையாக செய்வதாக குற்றஞ்சாட்டினர்.
நிறுவன ஒப்பந்தத்தை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்து, வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கவேண்டும் என, அப்போது வலியுறுத்தினர்.
ஒற்றைவாடைத் தெரு பகுதியில், சாலை மற்றும் கடற்கரையில் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுக்கிறது என, ஆறாம் வார்டு அ.தி.மு.க., உறுப்பினர் சுகுமாறன் மற்றும் தி.மு.க., உறுப்பினர் லதா ஆதங்கப்பட்டனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாய் வாரியம் வாயிலாக ஆய்வு செய்து தீர்வு காண்பதாக, செயல் அலுவலர் உறுதியளித்தார்.
வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட சிற்ப பகுதியில், சாலையை ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகள், சுற்றுலாவிற்கு இடையூறாக இருப்பதாகவும், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதாகவும், எட்டாம் வார்டு தி.மு.க., உறுப்பினர் வள்ளி விவரித்தார்.
பாதாள சாக்கடை அடைப்பு நீக்கம், குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, தற்போது ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை ரத்து செய்து, வேறு ஒப்பந்த ஏலம் நடத்தவும் வலியுறுத்தப்பட்டது.
செயல் அலுவலர், விரைவில் பணி ஓய்வு பெற இருப்பதால், அவரது ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து, திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். குடிநீர், சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு, கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

