அவசர இடமாறுதலுக்கு துடிக்கும் ‘ கட்டிங்’ பெண் அதிகாரி!
அவசர இடமாறுதலுக்கு துடிக்கும் ‘ கட்டிங்’ பெண் அதிகாரி!
PUBLISHED ON : நவ 26, 2026 12:00 AM

பில்டர் காபியை உறிஞ்சியபடியே, “புயலை கிளப்ப போறார் ஓய்...” என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. “யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“அரசியல் தலைவர் கள் சுயசரிதை எழுதறது இப்ப, ‘பேஷன்’ ஆயிடுத் தோல்லியோ... காங்கிரஸ் தமிழக முன்னாள் தலைவர் ஒருத்தரும், தன் அரசியல் அனுபவங்களை புத்தகமா எழுதிண்டு இருக்கார் ஓய்...
“தி.மு.க., கூட்டணியில் இருந்து த.வெ.க., அணிக்கு காங்., தாவியது, இந்த தலைவருக்கு சுத்தமா பிடிக்கல... இது சம்பந்தமா, தன் புத்தகத்துல எழுதியிருக்காராம் ஓய்...
“அதோட, கட்சியின் தேசிய தலைவர்களுக்கு தெரியாம, மாநில அளவில் சில நிர்வாகிகள் செய்த மோசடிகள் பற்றியும் அதுல புட்டு புட்டு வைக்க போறாராம்... ‘இந்த புத்தகம் வெளியில வர்றச்சே, தமிழக அரசியல்ல பெரும் புயல் வீசும்’னு, அவரது ஆதரவாளர்கள் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“நம்ம செல்வம் உட்கார, பெருந்தகையா இடம் குடுங்க...” என்ற அந்தோணிசாமியே, “எம்.எல்.ஏ.,வை மதிக்கவே மாட்டேங்கிறாங்க...” என்றார்.
“எந்த தொகுதியில வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகள்ல தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் தான் இருக்காங்க... ஆனா, அரசு விழாக்களுக்கு இவங்களை அதிகாரிகள் அழைக்க மாட்டேங்கிறாங்க...
“ஆனா, எந்த அரசு பதவியிலும் இல்லாத த.வெ.க., மாவட்டச் செயலர் மதனை அழைச்சு அரசு நிகழ்ச்சி களை நடத்துறாங்க... பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமீபத்துல விளையாட்டு மைதானம் மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்டினாங்க...
“இதுக்கு தொகுதியின் தி.மு.க., – எம்.எல்.ஏ., அண்ணாதுரையை கூப்பிடாம, த.வெ.க., மாவட்டச் செயலர் மதனை கூப்பிட்டு, அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரிகள் நடத்திட்டாங்க... இது சம்பந்தமா, சபாநாயகரிடம் முறையிட தி.மு.க., தரப்பு முடிவு பண்ணி யிருக்குதுங்க...” என்றார் அந்தோணிசாமி.
“அவசர அவசரமா இடமாறுதல்ல போக துடிக்கிறாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் மத்திய அரசின், ‘அம்ருத் 2.0’ திட்டத்துல நிறைய பணிகள் நடந்துச்சு... இதுல நகராட்சியின் முக்கிய பெண் அதிகாரி, ‘துணை’ பதவியில் இருந்தவருடன் சேர்ந்து, நிறைய நிதி முறைகேடுகள்ல ஈடுபட்டிருக்காங்க பா...
“இது பத்தி நகராட்சி யின், ‘தல’ பொறுப்பில் இருக்கிறவரும், ஐந்து கவுன்சிலர்களும் சேர்ந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பியிருக்காங்க... இது சம்பந்தமா, சென்னையில இருக்கிற நகராட்சி நிர்வாகத் துறை உயர் அதிகாரிகள், பெண் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருக்காங்க பா...
“அடுத்த கட்டமா, பெண் அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்த இருக்காங்க... இதனால பெண் அதிகாரி, தனக்கு தெரிஞ்ச த.வெ.க., முக்கிய பிரமுகர்கள் மூலமா, இடமாறுதல் வாங்கிட்டு ஊரை காலி செய்ய பார்க்கிறாங்க...
“ஆனா, ‘அவங்க எங்க போனாலும், இந்த நகராட்சியில் நடந்த முறைகேடுகளுக்கு பதில் சொல்லியே ஆகணும்’னு, புகார் அனுப்பியவங்க சொல்றாங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.
“சிதம்பரம், இப்படி உட்காரும்... கருணாம் பாள் ஊருக்கு போயாச்சா வே...” என, நண்பரிடம் பெரியசாமி அண்ணாச்சி விசாரிக்க, நண்பர்கள் இடத்தை காலி செய்தனர்.
