/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மின் விளக்கு கம்பங்கள் சேதம் ரயில்வே மேம்பாலத்தில் கும்மிருட்டு
/
மின் விளக்கு கம்பங்கள் சேதம் ரயில்வே மேம்பாலத்தில் கும்மிருட்டு
மின் விளக்கு கம்பங்கள் சேதம் ரயில்வே மேம்பாலத்தில் கும்மிருட்டு
மின் விளக்கு கம்பங்கள் சேதம் ரயில்வே மேம்பாலத்தில் கும்மிருட்டு
PUBLISHED ON : மார் 22, 2025 12:00 AM

மதுராந்தகம்,மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில், பழுதடைந்துள்ள மின்விளக்கு கம்பங்களை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
மதுராந்தகத்தில் இருந்து சூனாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.
சித்தாமூர், ஜமீன் எண்டத்துார், செய்யூர், சூனாம்பேடு, மாரிப்புத்துார், அருங்குணம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் மக்கள், இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மேம்பாலத்தின் மீது உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து, சில பகுதிகளில் எரியாமல் உள்ளன.
மேலும், மேம்பாலத்தின் மீது நடந்த விபத்துகளால் உடைந்த மின்விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
ஆனால், மீண்டும் புதிதாக மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்படவில்லை.
ஒரே பகுதியில், இரு மார்க்கத்திலும் 5 மின்விளக்கு கம்பங்கள் இல்லாததால், இருள் சூழ்ந்து உள்ளது.
அதனால், இரவு நேரங்களில் போதிய அளவு வெளிச்சமின்றி, ரயில்வே மேம்பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
எனவே, சேதமடைந்துள்ள மின் கம்பங்களை அகற்றி, புதிதாக கம்பங்கள் அமைக்கவும், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்க, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.