/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சேதமான சிறுங்குன்றம் சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சேதமான சிறுங்குன்றம் சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சேதமான சிறுங்குன்றம் சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சேதமான சிறுங்குன்றம் சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM

சிங்கபெருமாள்கோவில்:சிங்கபெருமாள்கோவில் அருகில், சேதமடைந்த சிறுங்குன்றம் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள்கோவில் அடுத்த சிருங்குன்றம் -- சிறுங்குன்றம் கூட்டு சாலை 3 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையில் 200 மீட்டர் துார சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். இதனால், சாலையை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையை பயன்படுத்தி அனுமந்தபுரம், சிறுங்குன்றம், பெருந்தண்டலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சிங்க பெருமாள்கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் இருபுறமும் வனப்பகுதிக்கு இடையே 200 மீட்டர் துாரம், சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் ஜல்லி கற்கள் குத்தி வாகனங்கள் பஞ்சராகி, குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் சுற்றியுள்ள கிராம மக்கள் சிறுங்குன்றம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இங்கு இருந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.