PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கோட்டூர்புரம், அம்பாடி சாலையைச் சேர்ந்தவர் அதித்; சொந்தமாக வர்த்தகம் செய்து வருகிறார். அவரது வீட்டின் தரை தள படுக்கை அறை பீரோவில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மாயமாகிவிட்டதாக, அதித்தின் மனைவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில், 'கடந்த, 17ம் தேதி அன்று பீரோவில் வைர நகை இருந்ததை பார்த்தேன். ஞாயிற்றுக்கிழமை பார்த்தபோது காணவில்லை.
வீட்டில் வேலை பார்க்கும் ஓட்டுநர்கள் மீது சந்தேகம் உள்ளது' என, தெரிவித்துள்ளார். ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

