/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
காங்., தொகுதிகள் மீது கண் வைத்துள்ள தி.மு.க., கூட்டணி தலைவர்!
/
காங்., தொகுதிகள் மீது கண் வைத்துள்ள தி.மு.க., கூட்டணி தலைவர்!
காங்., தொகுதிகள் மீது கண் வைத்துள்ள தி.மு.க., கூட்டணி தலைவர்!
காங்., தொகுதிகள் மீது கண் வைத்துள்ள தி.மு.க., கூட்டணி தலைவர்!
PUBLISHED ON : ஜன 02, 2026 02:10 AM

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ''துணை முதல்வருக்கே புகார் போயிடுச்சு பா...'' என, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''என்ன விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழகத்தில் புறம் போக்கு, பட்டா நிலங்கள்ல கிராவல் மண் எடுக்க, அரசிடம் அனுமதி வாங்கணும்... சென்னையைச் சேர்ந்த ஒருத்தர், 'ஒரிஜினல் பர்மிட்'டை பயன்படுத்தி, நிறைய போலி பர்மிட்களை தயாரிச்சு, கிராவல் மண்ணை இஷ்டத்துக்கு எடுத்து, அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்துறாரு பா...
''இது சம்பந்தமா, தி.மு.க., விவசாய தொழிலாளர் அணியின் மாநில துணை தலைவர் கைலாசம், துணை முதல்வர் உதயநிதிக்கே புகார் அனுப்பியிருக்காரு...
''அதுல, 'சென்னை நபர், ஒரு லோடு கிராவல் மண்ணுக்கு, 700 ரூபாய் கூடுதலா வசூல் பண்றாரு... இதனால, 1,500 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய ஒரு லோடு கிராவல் மண்ணை, 4,000 ரூபாய்க்கு விற்கிறாங்க... இப்படி வாங்குற பணத்தில், முதல்வரின் குடும்பத்தினர் சிலருக்கு தர்றதாகவும் அவர் சொல்றாரு... இதுல, நீங்க தலையிட்டு நடவடிக்கை எடுக்கணும்'னு குறிப்பிட்டிருக்காரு வே...'' என்றார், அன்வர்பாய்.
''ராஜப்பா, இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, ''நிறைய குளறுபடிகள் நடக்கறது ஓய்...'' என்றார்.
''எங்க வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''மதுரையில், வணிகவரித் துறையில நடக்கற சில விவகாரங்களை பார்த்து, நேர்மையான ஊழியர்கள் மனசு வெறுத்து போயிருக்கா... அதாவது, இங்க அலுவலக உதவியாளர் பணியிடத்துக்காக, வேற மாவட்டத்துல நடந்த, 'இன்டர்வியூ'வுக்கு ஒருத்தர் போயிருக்கார் ஓய்...
''கிட்டத்தட்ட, 45க்கும் மேற்பட்டவா வந்த இடத்துல, இவரும், இன்னொரு பெண்ணும் தலா, 5 லட்சம் ரூபாயை கொடுத்து, அந்த வேலையை வாங்கிட்டாளாம்... அதேபோல, ஹிந்துவா இருந்த ஒருத்தர், மதம் மாறி துணை கமிஷனர் அந்தஸ்து வரைக்கும் போயிட்டாலும், இன்னும் சலுகைளை அனுபவிக்கறார் ஓய்...
''இவர், தனக்கு கீழ வேலை பார்க்கறவாளை ஒருமையில தான் அழைப்பாராம்... இத்துறையில் பணியாற்றிய ஒருத்தர், சில வருஷங்களுக்கு முன்னாடி இறந்து போயிட்டார் ஓய்...
''கருணை அடிப்படையிலான வேலையை, அவரது நேரடி வாரிசுக்கு வழங்காம, அவரது தங்கை மகளுக்கு குடுத்திருக்கா... இப்படி ஏகப்பட்ட குளறுபடிகளை, மதம் மாறிய அதிகாரி பண்றதா ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மகேஷ்வரன், இந்த பேப்பரை அங்கே வையும்...'' என, நண்பரை ஏவிய அண்ணாச்சியே, ''காங்., தொகுதிகள் மேல கண் வச்சிருக்காரு வே...'' என்றபடியே தொடர்ந்தார்...
''தி.மு.க., கூட்டணியில் இருக்கிற, சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், இப்ப பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவரா இருக்காருல்லா... இவர், நடிகர் சரத்குமார் கட்சியில இருந்தப்ப, ஏற்கனவே நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.,வா இருந்தாரு வே...
''இப்ப, தி.மு.க., கூட்டணியில், வர்ற தேர்தல்ல நாங்குநேரி தொகுதி வேணும்னு கேட்கிறாரு... அதை தராட்டி, தன் சொந்த ஊரான துாத்துக்குடி மாவட்டம், வாழவல்லான் கிராமம் இருக்கிற, ஸ்ரீவைகுண்டம் தொகுதியாவது தாங்கன்னு கேட்காரு வே...
''நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் ரெண்டுமே இப்ப காங்., வசம் இருக்கு... தங்களது தொகுதிகளுக்கு குறி வைக்கிறதால, நாராயணன் மேல, இந்த தொகுதிகளின் காங்கிரசார் கடுப்புல இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடியவே, பெஞ்ச் கலைந்தது.

