/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
4 ஆண்டில் ரூ.100 கோடி சொத்து குவித்த தி.மு.க., நிர்வாகி!
/
4 ஆண்டில் ரூ.100 கோடி சொத்து குவித்த தி.மு.க., நிர்வாகி!
4 ஆண்டில் ரூ.100 கோடி சொத்து குவித்த தி.மு.க., நிர்வாகி!
4 ஆண்டில் ரூ.100 கோடி சொத்து குவித்த தி.மு.க., நிர்வாகி!
PUBLISHED ON : மார் 04, 2026 02:00 AM

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ''இப்பவே பிரசாரத்துல குதிச்சிட்டாரு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர் டாக்டர் சரவணன், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருக்காரு... கடந்த ஒரு வருஷமா, இந்த தொகுதியில் நிறைய நலத்திட்டங்களை செஞ்சிருக்காரு பா...
''சமீபத்துல, நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவங்கி, 10 ரூபாய்க்கு மூணு இட்லி, 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணின்னு குடுத்து, ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள் ஓட்டுகளை, 'கவர்' பண்ணிட்டு இருக்காரு... அதே சூட்டோடு பிரசாரத்தையும் துவங்கிட்டாரு பா...
''தினமும் காலையில, 'வாக்கிங்' போகும்போது மக்களிடம் குறைகளை கேட்டு, முடிஞ்ச உதவிகளை செய்றாரு... சாலை வசதி மாதிரி பெரிய திட்டங்களை மக்கள் கேட்டா, 'அடுத்து அ.தி.மு.க., ஆட்சி தான்... அப்ப, உங்க கோரிக்கைகளை கண்டிப்பா செஞ்சு தர்றோம்'னு சொல்லிடுறாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''சீட் கேட்கிறதுல, தொழில் வளர்ச்சியும் அடங்கியிருக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சேர்ந்திருக்குல்லா... இவங்க, திருவள்ளூர் மாவட்டத்துல மாதவரம், பொன்னேரி சட்டசபை தொகுதிகளை கண்டிப்பா தரணும்னு கேட்டிருக்காவ வே...
''ஏன்னா, இந்த தொகுதிகள்ல அவங்க குடும்பத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் இருக்கு... அந்த தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்களா இருந்தா, கல்வி நிறுவனங்களை வளர்க்க முடியும்னு நினைக்காவ வே...
''அதுவும் இல்லாம, அந்த ஏரியாவுல அவங்க குடும்பத்துக்கு சொந்தமான நிலம் ஒண்ணு சிக்கல்ல இருக்காம்... அதை எல்லாம் தீர்க்கணும்னா, 'இந்த தொகுதிகள் நம்ம வசம் இருக்கணும்'னு நினைக்காவ... இதை கேள்விப்பட்டு, இந்த ரெண்டு தொகுதி தி.மு.க.,வினரும் பல்லை, 'நற நற'ன்னு கடிச்சிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''நாலு வருஷத்துல, 100 கோடி ரூபாய் சம்பாதிச்சிட்டார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் தெற்கு ஒன்றிய ஆளுங்கட்சி நிர்வாகியை தான் சொல்றேன்... இவரது தம்பி மனைவி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வா இருக்காங்க ஓய்...
''இதனால, சகல அதிகாரங்களுடன் வலம் வரார்... தன் ஒன்றியத்தில் இருக்கற, 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகள்ல சாலைகள் போடறது, ரேஷன் கடைகள் கட்டறதுன்னு நிறைய டெண்டர்களை எடுத்து, நாலு வருஷத்துல, 100 கோடி ரூபாய்க்கு மேல சொத்துக்களை குவிச்சிட்டார் ஓய்...
''ஊராட்சி தலைவர்களுக்கும், ஒன்றிய அதிகாரிகளுக்கும் கச்சிதமா கமிஷன் வெட்டிடறதால, அவாளும் இவருக்கே டெண்டர்களை வாரி வழங்கியிருக்கா... ஆனா, பணிகள்ல தரம் இல்லாததால, இவர் போட்ட சாலைகள் எல்லாம் நாலே மாசத்துல நாசமாகிடறது ஓய்...
''யாராவது தட்டி கேட்டா, 'நான் சம்பாதிச்சு வீட்டுக்கு எடுத்துண்டு போகல... நிறைய பணத்தை கட்சி நிகழ்ச்சிகளுக்கு தான் செலவு பண்றேன்'னு ஒரே போடா போட்டுடறார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''நேத்து, 'டிவி'யில சந்தானம் காமெடி பார்த்தேன்... இப்ப, அவர் படம் ஒண்ணும் வரலையா வே...'' என அண்ணாச்சி விசாரிக்க, பெரியவ ர்கள் பேசிய படியே கிளம்பினர்.

