/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி தி.மு.க., -- எம்.பி., ரயில்வேக்கு கடிதம்
/
'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி தி.மு.க., -- எம்.பி., ரயில்வேக்கு கடிதம்
'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி தி.மு.க., -- எம்.பி., ரயில்வேக்கு கடிதம்
'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி தி.மு.க., -- எம்.பி., ரயில்வேக்கு கடிதம்
PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM
சென்னை, சென்னை புறநகர் மின்சார ரயில்களை மேம்படுத்த வேண்டும்' என, தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நம் நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
'தினமலர்' நாளிதழில் கடந்த 8ம் தேதி வெளியான செய்தியில், சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு, வேளச்சேரி, சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள ரயில் நிலையங்கள், மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் உடைந்தும், நீர் வசதி இல்லாமல் பயனற்றவையாகவும் உள்ளன.
இதனால் பயணியர், அவசரகாலங்களில், கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பல ரயில் நிலையங்களில் போதிய மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் போன்ற மின்சாதனங்கள் செயலிழந்துள்ளன என்பதில் இருந்து, பராமரிப்பு முற்றிலும் இல்லாத நிலைதான் நிலவுகிறது என்பது தெளிவாகிறது.
அதுபோல், குறைந்த கட்டண குடிநீர் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டிருப்பது, வெப்பத்தாலேயே அவதிப்படும் பயணியருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிப்பறைகளை பழுதுபார்த்து, சுத்தம் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்கி, குடிநீர் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.