/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது
/
ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது
PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இண்டூர்:தர்மபுரி அடுத்த ஆட்டுக்காரம்பட்டியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி வடிவேல், 40. இவர் ஆட்டுக்காரம்பட்டியில் புதிய வீடு கட்டி, பணி முடிந்த நிலையில், வீட்டின் மின் கட்டண டெரீப்பை மாற்றி தரக்கோரி, இண்டூர் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை அணுகினார். அப்போது, மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சசிகுமார், 48, என்பவர், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் வடிவேல், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். இதையடுத்து வடிவேலுவிடம், போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய, 15,000 ரூபாயை, மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சசிகுமார் பெற்றபோது, அவரை போலீசார் கைது செய்தனர்.

