/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
/
மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
PUBLISHED ON : மார் 04, 2024 12:00 AM

புதுடில்லி: வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்த மோசடி தொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்., முன்னாள் எம்.பி., மஹூவா மொய்த்ராவுக்கு மேலும் ஒரு சம்மனை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விசாரணை குழு அறிக்கையின்படி திரிணாமுல் காங்., லோக்சபா எம்.பி.யான மஹூவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பாக மஹூவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக டில்லி அலுவலகத்திற்கு பிப்.19-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என பிப். 15-ம் தேதி சம்மன் அனுப்பியது. மஹூவா மொய்த்ரா ஆஜராகவில்லை. இந்நிலையில் வரும் (மார்ச்11-ம் தேதி) ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிதாக சம்மனை மஹூவா மொய்த்ராவுக்கு அனுப்பியுள்ளது.

