தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 150 வாக்குறுதிகள் 'ரிப்பீட்'
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 150 வாக்குறுதிகள் 'ரிப்பீட்'
ADDED : ஜன 30, 2026 06:31 AM

கடந்த தேர்தலில் நிறைவேற்றாத 150 வாக்குறுதிகளை மீண்டும் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.
தி.மு.க., தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: இந்த தேர்தலிலும், 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுக்க உள்ளோம். அதில், கடந்த தேர்தலில் நிறைவேற்றாத, 'நீட்' தேர்வு ரத்து, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு, டாஸ்மாக் கடைகள் குறைப்பு, சம வேலைக்கு சம ஊதியம், எல்லாருக்கும் வீடு, கல்விக் கடன் தள்ளுபடி. தனியார் துறையில் இட ஒதுக்கீடு, கர்ப்பிணிகளுக்கு 24,000 ரூபாய் உதவித்தொகை, அரசு துறைகளில் 6 லட்சம் வேலைவாய்ப்பு, கச்சத்தீவு மீட்பு, கூவம் சீரமைப்பு, காவிரி - குண்டாறு இணைப்பு, 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்வு, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை என, 150க்கும் மேற்பட்ட முக்கியமான வாக்குறுதிகளை மீண்டும் சேர்க்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

