/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வெளிநாடு வாழ் தமிழர்களுடன் 'எத்திசையும் தமிழணங்கே' விழா
/
வெளிநாடு வாழ் தமிழர்களுடன் 'எத்திசையும் தமிழணங்கே' விழா
வெளிநாடு வாழ் தமிழர்களுடன் 'எத்திசையும் தமிழணங்கே' விழா
வெளிநாடு வாழ் தமிழர்களுடன் 'எத்திசையும் தமிழணங்கே' விழா
PUBLISHED ON : ஜன 12, 2025 12:00 AM

சென்னை,வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் ஜன., 11 மற்றும் 12ம் தேதி, அயலக தமிழர் தினமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, நான்காவது ஆண்டாக, இரண்டு நாள் அயலகத் தமிழர் தினவிழா, 'எத்திசையும் தமிழணங்கே' என்ற கருப்பொருளுடன் நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.
விழாவை துவக்கி வைத்து, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
வெளிநாடு வாழ் அயலக தமிழர் நலவாரியத்தில், 74,000 பேர் உறுப்பினராக உள்ளனர்.
இந்த நிகழ்வுக்காக 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், தமிழகத்தை நோக்கி வந்துள்ளது, தமிழ்தாய் பாசத்தை காட்டுகிறது. உலகின் முன்னணி நிறுவனங்களான 'கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட்' ஆகியவற்றில், தமிழர்களுக்கு என தனி மதிப்பு உள்ளது.
வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், அயலக தமிழர் நலத்துறை உடனடியாக களம் இறங்கி தமிழர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இங்கு பாரம்பரியத்தை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.