தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தேர்தல் விதிகளை மீறி மணல் குவாரிகளில் மிரட்டல் வசூல்!

 தேர்தல் விதிகளை மீறி மணல் குவாரிகளில் மிரட்டல் வசூல்!

 தேர்தல் விதிகளை மீறி மணல் குவாரிகளில் மிரட்டல் வசூல்!


PUBLISHED ON : ஏப் 04, 2026 03:24 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2026 03:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''சுயேச்சையா களமிறங்க முடிவு பண்ணிட்டாரு வே...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் - தனி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சண்முகையா, மறுபடியும், 'சீட்' கேட்டாரு... ஆனா, உள்ளூர்காரரான அவரை விட்டுட்டு, வெளியூர்காரரான ராமஜெயத்துக்கு தலைமை சீட் குடுத்துட்டு வே...

''சண்முகையாவின் அண்ணன் முருகேசன், நிறைய தொழில்கள் பண்ணுதாரு... அ.தி.மு.க.,வுல இருந்த முருகேசன், 2021 சட்டசபை தேர்தல்ல, தன் தம்பி சண்முகையாவுக்கு தேர்தல் வேலைகள் பார்த்ததால, அந்த கட்சியில இருந்து நீக்கப்பட்டாரு வே...

''இப்ப, சண்முகையாவுக்கும் சீட் கிடைக்காம போயிட்டதால, முருகேசனை சுயேச்சையா களமிறங்கும்படி, எம்.எல்.ஏ., குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்திட்டு இருக்காவ... முருகேசனும், தொகுதியில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள், கோவில் தர்மகர்த்தாக்கள் ஆதரவு இருக்கிறதால, சுலபமா ஜெயிச்சிடலாம்னு கணக்கு போட்டுட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''அமைச்சர் ஆதரவுல, நங்கூரம் போட்ட மாதிரி இருக்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில், அதிகாரியா இருக்கிறவர், 2021ல் இந்த ஊருக்கு வந்தார்... 2024 லோக்சபா தேர்தலப்பவே, இவரை இடமாற்றம் பண்ணியிருக்கணும்... துறையின் அமைச்சர் சாமிநாதனுக்கு நெருக்கமானவர் என்பதால, இடமாறுதல்ல தப்பிச்சிட்டாருங்க...

''இப்ப, சட்டசபை தேர்தலுக்காக அதிகாரிகள் இடமாறுதல் நடந்தப்பவும், அதுல சிக்காம அமைச்சர் தயவுல தப்பிச்சிட்டாரு... இப்ப, தேர்தல் பணிகள்லயும் ஈடுபட்டிருக்காருங்க...

''அதோட, 'தேர்தல் விழிப்புணர்வு பணிகளை, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர்ல இருக்கிற, மத்திய பஸ் ஸ்டாண்ட்லயே தொடர்ந்து நடத்துறார்'னு இவர் மேல புகார்கள் வருது... 'இவரை உடனே மாத்தணும்'னு கலெக்ட ருக்கும், தேர்தல் கமிஷனுக்கும் எதிர்க் கட்சியினர் புகார் அனுப்பியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சதீஷ்குமார், இதையும் கேட்டுண்டு கிளம்பும்...'' என்ற குப்பண்ணாவே, ''தேர்தல் விதிகளை மீறி, மிரட்டல் வசூல் நடத்தறா ஓய்...'' என்றார்.

''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''தமிழகத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்ல இருக்கோல்லியோ... இதை சாதகமா பயன்படுத்தி, புதுக்கோட்டையை சேர்ந்த மணல் தொழிலதிபரின் ஆட்கள், மணல் குவாரிகள்ல, 'ராயல்டி' எனும் உரிமைத்தொகை வசூல்ல இறங்கிட்டா ஓய்...

''திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், நாகைன்னு பல மாவட்டங்கள்ல இருக்கற மணல் குவாரிகளுக்கும் போய், உரிமைத்தொகை வசூலிக்கறா... குவாரி உரிமையாளர்கள் தரப்பு, 'அரசு அனுமதியில்லாம எப்படி பணம் வசூல் பண்றேள்'னு கேட்டா, 'நாங்க புவியியல் மற்றும் சுரங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு பணம் கட்டிட்டோம்... அவா தான் எங்களை வசூலிக்க சொன்னா'ன்னு அவா மேல பழியை துாக்கி போடறா ஓய்...

''இதனால, குவாரி உரிமையாளர்கள் நொந்து போயிருக்கா... தமிழக மணல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குகேஷ், 'மிரட்டல் வசூல் பண்றவா மீது நடவடிக்கை எடுக்கணும்'னு, டி.ஜி.பி.,யிடம் புகாரே குடுத்திருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''அட ராமச்சந்திரா...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us